பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 + கம்பன் - புதிய பார்வை தெய்வத்தின் மகன்' என்று கூறுவதிலும் தவறு இல்லை. 'என் தெய்வமும் மகனும்- தாயும் தம்பியும் ஆம் வரம் தருக எனக் கேட்டது அற்புதம்! நீ மறுபடி மனைவியாக ஏற்றுக்கொள் என்று கூறி இருக்கலாம். அவ்வாறு கூறினால் தசரதன் மனநிலையை அறியாது கூறிய சூழ்நிலை ஏற்படும். அதற்குப் பதிலாக, அவள் என் தாயாகவும், அவன் என் தம்பியாகவும் ஆக வேண்டும் என்று கேட்பது, மிக அற்புதமான ஒன்றாகும். வரம் என்று கேட்டுவிட்டமையின், தசரதன் அதனை மீறவும் வழி இல்லை. நடுநிலையுடன் நிற்கும் இராமன், உலகம் வெறுக்கும் ஒரு பெருமாட்டி உண்மையில் தவறு செய்யவில்லை என்று கருதினால், அவளை மீட்டுத் தாயாக ஆக்கிக் கொண்டான். வேதமே அனைய பரதனைத் தம்பியாக ஆக்கிக்கொண்டான். இவை இரண்டையும் விட உயர்வானது தன்னைப் பெற்றெடுத்த தந்தை தீய உணர்வுகளின் காரணமாக அடைய முடியாத வீடுபேற்றை, அவனுக்கு வழங்க முற்படுகிறான் தனயன். தசரதன் மனமாசைக் கழுவினால் ஒழிய இது நடைபெறாது. நேரிடையாக அவன் குற்றத்தை எடுத்துக்கூறித் திருத்தும் உரிமை தனயனுக்கு இல்லை. எனவே, இந்த அற்புதமான வழியைக் கையாள்வதன் மூலம் முதலாவது தசரதனுக்கு நலஞ்செய்து, அடுத்துத் தாயையும் தம்பியையும் தனக்கே உரிய முறையில் இராமன் நடந்துகொள்கிறான். கம்பன் வெற்றி கடவுளை மனிதனாகப் பிறக்கவைத்துக் காப்பியஞ் செய்தவர்கள் பலர் இருப்புனும், கம்பன் அவர்கள் இடையே ஈடும் எடுப்பும் இல்லாமல், தனக்கு நிகர் தானே ஆக நிற்கின்றான். மனிதனாகப் பிறந்த பரம்பொருள் இறுதிவரை மனிதனாகவே நடந்து கொள்கிறது. யார் யாரோ, தன்னைப் பற்றி ஏதேதோ கூறினாலும், அவற்றால் நிலை மாறாமல்