பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் t 3 இல்லாததாய் இருக்கும். ஆனால் வளம்பெற்ற மொழியில் அவ்வாறு இருத்தல் முடியாது. இன்று நமக்குக் கிடைத்துள்ள பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, தொல்காப்பியம் ஆகிய இலக்கிய இலக்கண நூல்கள் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டவையா யினும், இத் தமிழர்களின் வாழ்வு உச்சநிலையில் இருந்த பொழுது அவை தோன்றியிருக்க வேண்டும். மிகமிகப் பண்பட்ட கவிதை வடிவம் பெற்ற இத்தகைய இலக்கியங் கள் ஒரு காலகட்டத்தில் தோன்றின என்றால், அதற்கு முன்னர்ச் சில ஆயிரம் ஆண்டுகளாவது அம் மொழியும் இலக்கியமும் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். எனவே, இத்தமிழ் மொழியின் தொன்மை நம் ஆராய்ச்சிக்குள் அடங்காத ஒன்று என்பது கருதித்தான் போலும் தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு சூழ்கலைவாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய் - - (எங்கள் தாய்-) என்று இந்த நாட்டையும், . - ஆதி சிவன் பெற்றுவிட்டான் என்னை (தமிழ்த்தாய்-) என்று இம் மொழியின் தொன்மையையும் கவியரசர் பாரதியார் பாடிச் சென்றார். - செவிவழிக் கதைகள் இத்துணைப் பழமையானது. இம். மொழியும், நாகரிகமும் என்றால் பழமைக்குரிய அடையாளமாகப் பல்வேறு செவிவழிக் கதைகள் இம்மொழி இலக்கியத்தில் இடம்பெறுவது இயற்கைதான். இச் சங்கப் பாடல்களில் பல்வேறு கதைகள் இடம் பெற்றிருக்கின்றன என்பதும் நாம் அறிந்த ஒன்றே. அவற்றுள் பலவற்றை, இத்துணைக்