பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 205 மூவர்க்கும் முதல்வன் திரு அவதாரப் படலத்தின் 103ஆம் பாடலில், இராமன் கோசலை வயிற்றில் பிறந்தான் என்று கூறும்பொழுது, 'ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து, அருமறைக்கு உணர்வு அரும் அவனை, அஞ்சனக் கருமுகில் காட்டும் சோதியை (103) என்று பாடிய கவிஞன், அதே படலத்தின் இறுதிப் பாடலாகிய 134ஆம் பாடலில், முப்பரம் பொருளுக்கும் முதல்வன் முந்துறும் (34) என்று பேசுகிறான். கவந்தன் தன் சுய உருவைப் பெற்றவுடன், மூன்று கவடாய் முளைத்து எழுந்த மூலமோ? (கவந்தன் படலம்-40) என்று பேசுகிறான். இராவணனிடம் தன் கணவன் யார் என்பதைக் கூறவந்த பிராட்டி, செங்கண்மால், நான்முகன், சிவன் என்றே கொலாம் எங்கள் நாயகனையும் நினைத்தது-ஏழை நீ! என்கிறான். (காட்சிப் படலம்-120) முதல்நாள் போரில் இராமனிடம் தோற்று, இலங்கை மீண்ட இராவணன், மாலியவான் என்ற தன் பாட்டனிடம் இராமனுடைய அழகு, வீரம், குணநலம் என்பவை பற்றிப் பேசுகிறான். பேய்களோடு இடுகாட்டில் நடமாடும் சிவபெருமானின் எட்டுத் தோள்கள் இந்திரனின் இரண்டு தோள்கள், இவ்வண்டத்தை வயிற்றில் அடக்கிய திருமாலின் ஆயிரந் தோளும் சேர்ந்து பணிபுரிந்தாலும் இராமனின் விரல் ஒன்றுக்கு ஆற்றமாட்டா என்ற பொருளில், பேய்இருங் கணங்களோடு சுடுகளத்து உறையும்பெற்றி ஏயவன் தோள்கள் எட்டும், இந்திரன் இரண்டு தோளும், மாயிரு ஞாலம் முற்றும் வயிற்றிடை வைத்த மாயன் ஆயிரம் தோளும், அன்னான் விரல் ஒன்றின் ஆற்றல் ஆற்றா. (கும்பகர்ணன் வதைப்படலம்-24)