பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 + கம்பன் - புதிய பார்வை என்று பேசுகிறான். அடுத்து இக்கருத்துக்கு முடிமணி வைப்பதுபோல, இராவணனே ஒரு கருத்தைக் கூறுகிறான், வாசவன், மாயன், மற்றை மவருளோன், மழுவாள் அங்கை ஈசன் என்று இனைய தன்மை இளிவரும் இவரால் அன்றி? நாசம்வந் துற்ற போதும், நல்லது ஒர் பகையைப் பெற்றேன், (கும்பகர்ணன் வதைப்படலம்-3) இந்திரன், திருமால், நான்முகன், சிவபெருமான் என்ற இளிவந்த இயல்புடைய இவர்களால் அல்லாமல், நல்ல சிறந்த பகைவனால் என் நாசம் வந்து சேர்ந்தது.) - எனவே, ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்து அறிவு அமைந்தவனும், பகைவனும் ஆகிய இராவணன், இராமன் மூவரும் அல்லாத ஒருவன் என்ற கருத்தைப் பேசுமாறு செய்கிறான் கவிஞன். முதன்முறையாக இராமனைச் சந்தித்த இராவணன் மனத்தில் தோன்றிய எண்ணம். இராமன் மூவரினும் மேம்பட்ட பரம்பொருள் என்பது, இதே இராவணன், கடைசி முறையாக இராமனைக் காணும் பொழுதும் இதே கருத்தைத் தெரிவிக்கின்றான். சிவனோ! அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம் அவனோ! அல்லன், மெய்வரம் எல்லாம் அடுகின்றான்; தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன், இவனோதான் அவ்வேத முதற் காரணன்? என்றான். இராவணன் வதைப்படலம்-124) காப்பியத்தின் தொடக்கத்தில், அவதாரப் படலத்தில் 'முப்பரம் பொருளுக்கும் முதல்வன் இராமன் என்று தொடங்கிய கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன், காப்பியத்தின் இறுதியில் இராவணன் இறக்கப் போகும் முன், அவன் கூற்றாகவே இவனோ தான் அவ்வேத முதற்காரணன்