பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 207 என்று பேச வைக்கின்றான். உலகம் போற்றும் ஒர் ஒப்பற்ற காப்பியத்தைப் படைக்கப் புகுந்த கவிஞன், இந்நாடு, முழுமைக்கும் தன் காப்பியம் பயன்பட வேண்டும் என்றுதானே எண்ணி இருப்பான்? அப்படியானால் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சமரச நிலையில் தானே கடவுளைப் பற்றிக் கூறி இருப்பான்? ஒரு குறிப் பிட்ட சமயத்துக்கு மட்டும் உரியதாகக் கவிஞன் இந்நூலை ஆக்கி இருக்க முடியாது. கடவுள் தத்துவம் பற்றி அவன் காலத்திற்கு முன்பே பற்பல சான்றோர்கள் நிரம்பக் கூறிச் சென்றுள்ளார்கள். கவிஞன் குறிக்கோள் தமிழ்ச் சமுதாயத்தில் இருந்த சிறப்புகள், குறைபாடுகள் என்ற இரண்டையும் அலசிப் பார்த்து, அந்தச் சிறப்புக்களை எல்லாம் தான் கண்ட கோசல மக்ககள் சமுதாயத்திற்கு ஏற்றினான். தமிழ்ச் சமதாயத்தில் கண்ட குறைபாடுகளைக் கோசல சமுதாயத்தில் இல்லாதவாறு செய்தான். இத்தகைய ஒரு குறிக்கோள் தன்மை பெற்ற சமுதாயத்தைப் படைத்துக் காட்டுவதன் மூலம், தான் பிறந்த தமிழ்நாட்டை உய்விக்க விரும்பினான். அவன் காலம் வரை தமிழ் மக்களிடம் அருகிக் காணப்பெற்ற புலனடக்கம் என்ற ஒன்றுக்கு, மிகப்பெரிய சிறப்புத் தந்து, காப்பியத்தில் வரும் தலைவன், தலைவி, இரண்டாவது தலைவன் முதலானவர்களைப் புலனடக்கம் செய்த சான்றோர்களாகப் படைத்துக் காட்டினான். அப் புலனடக்கம் இல்லாத சமுதாயம், இலங்கையைப் போல, அது எத்துணைச் சிறப்புடனும் அதிகார வெறியுடனும் செல்வச் செருக்குடனும் வாழ்ந் தாலும், அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதையும் விரிவாக எடுத்துக் காட்டினான். எனவே, தனிமனித முன்னேற்றம், சமுதாய முன்னேற்றம் என்ற இரண்டுமே புலனடக்கத்தால் வருமே தவிர, வேறு குறுக்கு