பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 & கம்பன் - புதிய பார்வை மறக்கவில்லை. அதே நேரத்தில் முந்திரிக்கொட்டை போல் இக் கருத்து வெளிப்படையாக அமையவும் கூடாது. எனவே, கவிஞன் மூல நூலாகிய வான்மீகத்தில் இல்லாத ஒரு பகுதியைத் தக்க இடத்தில் புகுத்துகிறான். அப் பகுதி அமைந்துள்ள இடத்தையும், அப்பகுதியின் சிறப்பையும் அறிந்த எவரும் அதனை விட்டுவிட விழையமாட்டார்கள். அப்பகுதி முழுவதும் கவிஞனின் கடவுட் கொள்கையை நிறுவப் பயன்படுகிறது. அப் பகுதியின் கதைப்போக்கு இவ்வாறு கவிஞன் தன் கருத்தை வெளியிட மிகவும் உதவியாக அமைந்துவிட்டது. அதுவரை நாயன்மார்களும், ஆழ்வார்களும் கூறிவந்த பக்தி மார்க்கத்துடன், சங்கரர், இராமானுஜர் போன்ற அறிவுவாதிகளின் வாதங்களும் இடம்பெற, ஓர் வாய்ப்பான அமைப்புத் தேவைப்பட்ட தனால்தான், வான்மீகி நினையாத இப் புதுப் பகுதியைக் கவிஞன் புகுத்துகிறான். அந்த அரிய பகுதிதான் இரணியன் வதைப்படலம் என்ற பகுதியாகும் அனுமன் ஒரு கருவி இந்தப் பகுதியிலும், காப்பியத்தின் உள்ளேயும், பாத் திரங்களின் மூலமாகக் கவிஞனின் கடவுட் கொள்கை பேசப்பெறுகிறது. இரணியனின் வரலாற்றுப் பகுதியில் அவன் மைந்தனாகிய பிரகலாதன் கம்பனின் திருவாய்க் கேள்வியாகப் பயன்படுகிறான். காப்பியத்துள் கல்விக்கடல் என்று காப்பிய நாயகனாலேயே புகழப்பட்ட மாருதி திருவாய்க் கேள்வியாகப் பயன்படுகிறான். இந்த இருவரை மட்டும் ஏன் கவிஞன் பயன்படுத்த வேண்டும்? அவன் கூறவந்த தத்துவம் சாதாரண அறிவுடையோரால் புரிந்து கொள்ளக்கூடியது அன்று. எனவே, மாபெரும் அறிஞர் களாகிய இருவரைத் தேர்ந்து எடுத்துப் பேசுமாறு செய்கிறான். எத்துணை அறிவுக்கூர்மை உடையவராயினும், வெறும் கல்வியால் மட்டும் இந்த ஞானத்தைப் பெற்றுவிட முடியாது. கல்வி, அறிவு என்பவற்றுடன் புலனடக்கமும் முழுவதுமாகப்