பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 211 பெற்றவர்களே பரஞானத்தைப் பெற முடியும். அத்தகைய தகுதியுடையவனாக அனுமனைப் படைக்கிறான். உண்மை ஒளியைக் காண்பதற்குக் கல்வி, கேள்வி என்பவற்றுடன் புலனடக்கமும் தேவை என்பதை அறிவிக்கவே அனுமன் படைக்கப்படுகிறான். வான்மீகியின் அனுமனிலும், கம்பனுடைய அனுமன் இத்துறையில் மாறுபட்டு நிற்கின் றான். அப்படியானால் பிரகலாதன் குழந்தையாயிற்றே: நாம் எதிர்பார்க்கும் கல்வியும் கேள்வியும் அவனுடைய வயதுக்குள் பெறுவது இயலாத காரியமாயிற்றே? இன்னுங் கூறப்போனால், அவனுக்கு எழுத்து அறிவிக்கத் தொடங்கியவுடனேயே பூசல் தோன்றிவிட்டதே? அப்படி இருக்க, அனுமனுடன் பிரகலாதனை எவ்வாறு சேர்த்துப் பேசுவது? இந்த வினாவிற்குப் பிறநாட்டார் கூறும் விடை வேறு விதமாக இருக்கலாம். ஆனால், இந் நாட்டவர் மிகப் பழங்காலத்திலேயே இதற்கு விடை கூறிச் சென்றனர். உயிர், சங்கிலித் தொடர்போல் பல்வேறு பிறப்புகள் எடுக்கின்றது. பல பிறவிகளில் முழு வளர்ச்சி பெற்றவர்கள் தம் இறுதிப் பிறவியில் முன் பல பிறவிகளில் அறிந்தவற்றை இளமை யிலேயே ஒதாது உணர்ந்துவிடுகின்ற்னர், 'ஒருமைக்கண் தான் கற்ற கல்வி, ஒருவற்கு எழுமையும் எமாப்பு உடைத்து' (குறள் 398 என்பது பொதுமறை. இளமையிலேயே ஒதாது உணர்தல் என்பதை இந்நாட்டவர் நன்கு அறிந்திருந்தனர். இதனை மெய்ப்பிப்பதற்காகப் போலும் நம்மாழ்வாரும், ஞானசம்பந்தரும் மூன்று வயதிலேயே பாடத் தொடங்கினர். ஒதாது உணர்ந்த பெருமக்கள் என்று அவர்கள் அழைக்கப்பெற்றனர். எனவே முறையாகக் கல்வி என்பவற்றின் வழிச் செல்லாமல் இவற்றின் பயனைப் பெற்ற பிரகலாதன் மூலமாகக் கம்பன் பேசுவதில் தவறு ஒன்றும் இல்லை. நிறைந்த கல்வியின் பயனாகவும், உண்மைப் பொருளை உணரலாம்; ஒதாது இறையருளாலும் உணரலாம்: என்பதைக் காட்டவே, முறையே அனுமனும், பிரகலாதனும் உதாரணங்கள் ஆயினர். .