பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 + கம்பன் - புதிய பார்வை இரு பாத்திரங்கள் இந்த இரு பாத்திரங்களும் கவிஞன் சொல்லவந்த நுட்பமான கருத்தைப் பேச முற்றிலும் தகுதி வாய்ந்தவையே. இதன்மேலும் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. ஒருவன் ஒன்றைப் பேசுகிறான் என்றால், அதைக் கேட்பதற்கு என ஒருவன் இருத்தல் வேண்டும் அல்லவா? ஒருவன் பேசுவதைக் கேட்க மனிதர்கட்கா பஞ்சம் என்று நினைக்கத் தோன்றுகிறதா? சாதாரணமான பேச்சுப் பேசினால், அதனை யார் வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால் கடவுள் தத்துவத்தை அனுமன், பிரகலாதன் போன்ற மேன்மக்கள் பேசத் தொடங்கினால், அதனைக் கேட்பது யார்? கேட்பவர்களும் அதனைப் புரிந்துகொள்ளக்கூடிய கல்வி, கேள்வி முதலியவற்றைப் பெற்றிருக்க வேண்டுமே ? அத்தகையவர்கள் இல்லாதவிடத்தில், இதுபற்றிப் பேசினால் ஒரு பயனும் ஏற்படாதே. - அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம்கணத்தர் அல்லார்முன் கோட்டி கொளல் (திருக்குறள்-720) |தம் அறிவு முதலியவற்றிற்கு ஏற்ற கூட்டத்தார் அல்லாதவர்களிடம் சென்று, உயர்ந்த கருத்துக்களைக் கூறும் சொற்களைச் சொல்லாலே சொன்னால் அச் சொற்கள் பயன் அற்றுச் சாக்கடையில் கொட்டிய அமிழ்து போல வீணாகிவிடும்.) என்று குறள் கூறுவதைக் கவிஞன் மறக்கவே இல்லை. எனவே, இந்த இருவரும், யாரிடம் இந்த உயர்ந்த தத்துவத்தைப் பேசுகிறார்கள் என்பதில் கவனமாக இருக்கிறான். பிரகலாதன் தன் தந்தையாகிய இரணிய னிடம்தான் இவ் வாதங்களைப் பேசுகிறான். இரணியன் கல்வி, கேள்வி பற்றி ஐயுறுவார் யாரும் இலர். எனவே, அது பொருத்தமாகிறது. அடுத்துச் சுக்ரீவன் போன்ற ஞான