பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 * கம்பன் - புதிய பார்வை காலம் கழித்து வாழும் நாம், இன்னதைத்தான் குறிக் கின்றது என்று புரிந்துகொள்ள முடிகிறது. சில கதைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதும் உண்மைதான். புரிந்துகொள்ளக்கூடிய கதைகளில் இராமனைப் பற்றிய இரண்டு குறிப்புகள் இங்கு அறிய வேண்டியவை. புறநானூற்றில் நகையை உண்டாக்கும் ஒரு நிகழ்ச்சியைக் கூறும்பொழுது இராமகாதை பேசப்படுகிறது. சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் என்ற புலவர் பாட வருகின்றார். பெருநகைக்குரிய செயல் சோழனுடைய அரண்மனையில் பாணர்கள் தடாரிப் பறையை முழக்கிக்கொண்டு, பகைவர்மேற் செல்லும் அவனுடைய சிறப்பைப் பாடினர். உடனே, சோழன் மிகச்சிறந்த பொன்னாபரணங்களை வாரிவாரி வழங்கி னான். முன்னர்ப் பின்னர் ஆபரணங்களைப் பார்த்தறி யாத அப்பாணரின் துணைவியரான விறலியர் எந்த அணிகளை எவ்வாறு எந்த உறுப்பில் அணிய வேண்டும் என்பதை அறியாதவராகையினாலே விரல்களில் போட வேண்டிய மோதிரத்தைக் காதுகளிலும், காதிற் போட வேண்டியவற்றை விரல்களிலும், இடையில் கட்ட வேண்டியவற்றைக் கழுத்திலும், கழுத்தில் அணிய வேண் டியவற்றை இடையிலும், அணிந்து கொண்டனராம். இச்செயல் எதுபோல உள்ளது என்று கூறவந்த கவிஞர், மிக்க ஆற்றலையுடைய இராமனுடன் வந்திருந்த சீதையை வன்மையுடைய அரக்கன் இராவணன்) கவர்ந்து சென்ற பொழுது, சீதையிடத்திருந்து நிலத்தில் விழுந்த மதிப் புயர்ந்த ஆபரணங்களை (கிட்கிந்தையிலுள்ள) சிவந்த முகத்தையுடைய குரங்கின் கூட்டம் எடுத்து (எவ்வாறு அணிவது என்று தெரியாமல்) அணிந்துகொண்டு பெரு நகைக்கு இடம் அளித்ததுபோல உளது என்ற பொருளில்,