பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 213 சூனியங்களுடன் வாழும் மாருதி, தான் அறிந்த இக் கொள்கையை யாரிடம் பேச முடியும்? கிட்கிந்தையில் இராமனை அறிந்துகொண்ட மாருதி சுந்தரகாண்டம் முடியுந் தறுவாயில்தான் கடவுள் கொள்கையைப் பேச வாய்ப்பைப் பெறுகிறான். ஆம் ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்து அறிவு அமைந்தவனாகிய இராவணனிடம்தான், இதுபற்றிப் பேசுமாறு செய்கிறான் கவிஞன். இராவணன், அனுமன் உரையாடலில் காப்பியப் போக்கிற்கு உதவி செய்யும் பகுதி மிகமிகக் குறைவுதான். இரணியன் வதைக்கும், காப்பியப் போக்கிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. எனினும், இவை இரண்டையும் கவிஞன் படைத்ததன் நோக்கம், அந்நாளில் இருந்த சமயப் பிரிவினைக் குழப்பத்தை மாற்றித் தான் கண்ட கடவுள் கொள்கையை நிறுவுவதற்கேயாம். உயர்வும் எளிவருதலும் இனி, கவிஞன் தன் கருத்தாகக் கூறிய கடவுள் வாழ்த்துப் பகுதிகளையும், வருணனைப் பகுதியில் வரும் சில பகுதிகளையும் காண்பது பயனுடையதாகும். அயோத்தியா காண்டக் கடவுள் வாழ்த்தில் பாதிப் பாடல் இறை இலக்கணத்தையும், பின் பாதிப் பாடல் அந்த இறைவனின் எளிவந்த தன்மையையும் (ஸெளலப்பியம் எடுத்துக் கூறுகிறது. வான் நின்று இழிந்து வரம்பு இகந்த மாபூதத்தின் வைப்பு எங்கும் ஊனும், உயிரும், உணர்வும்போல் உள்ளும் புறத்தும் உளன் என்பகூனும் சிறிய கோத்தாயும் - கொடுமை இழைப்பக் கோல் துறந்து கானும் கடலும் கடந்து இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன். (அயோத்தியா காண்டம்-வாழ்த்து