பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 கம்பன் - புதிய பார்வை |வாக்கு, மனம் கடந்து நிற்கும் தன் இயல்பான நிலையிலிருந்து கீழே இறங்கி, ஐம்பொரும் பூதங்களின் பல்வேறு பரிணாமமாக இருக்கின்ற அனைத்துப் பொருள்களிலும், ஊனாகவும், உயிராகவும், உணர்வாகவும் அனைத்திலும் உள்ளும் புறத்தும் இருப்பவனே, கூனியும், சிறிய தாயும் செய்த கொடுமையால் செங்கோல் துறந்து, காடு, கடல் கடந்து இமையோர் இடுக்கணைத் தீர்த்த மன்னனாவான்.) முரணுடைச் சொல் கடவுள் என்ற சொல்லே முரண்பட்ட இரு சொற்களால் ஆயது-கடந்து நிற்றல் என்றபிறகு, உள்ளே இருப்பது என்று கூறுவது, மனத்தில் வாங்கிக் கொள்ள முடியாத கருத்தாகும். நம்முள்ளேயும், கடந்தும் நிற்கும் காற்று முதலியவற்றை நினைவில் கொண்டால் ஒருவாறு புரிய முடியும். அனைத்தையுங் கடந்து நிற்பது மட்டும் இதனுடைய இலக்கணம் அன்று. கடந்து நிற்கும் அதேநேரத்தில், உள்ளும் இருப்பது அதுவே. வேறு வகையாகக் கூற வேண்டுமாயின், இந்தப் பொருளைப் பொறுத்தமட்டில் கடந்தது என்பதும், உள்ளிருப்பது என்பதும் பொருளற்ற சொற்களாகும். அளவும் வடிவும் உடைய ஒன்றுதான், கடத்தலும் இருத்தலும் ஆகிய வினைக்குக் கர்த்தாவாக இருக்க முடியும் அளவு, வடிவு இல்லாத ஒன்று, உள்ளும், வெளியும், எக்கடி எங்கும் நீக்கம் அற நிறைந்து, போக்குவரவு இல்லாமல் இருக்கிறதோ, அதேபோன்றது இப்பொருள் என்று கொள்ள வேண்டும். இடம்பெயர்ந்து செல்லாத சூரியனைக் கிழக்கே தோன்றி, மேற்கே மறைந்தான் என்று கூறும் மரபுபோலத்தான், வான் நின்று இழிந்தான் என்று கூறுவது. அவன் ஓரிடத்தில் இருந்து பிறிதோர் இடத்தில் இல்லாமல் போனால்தானே, அங்கிருந்து இங்கு வந்தான் என்று கூறுவது பொருந்தும். வருதல், போதல், செய்தல் என்ற தொழில்களைச் செய்யும்