பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 215 வினைமுதல் எங்கும், எப்பொழுதும் ஓயாது தொழிற்பட்டுக் கொண்டே இருக்குமானால், வந்தது, போயிற்று, செய்தது என்ற சொற்களுக்குப் பொருள் இல்லை. 'வந்தாய் போலே வாராதாய், வாராதாய் போல் வருவானே (நாலாயிரம்274) என்று ஆழ்வார் குறிப்பது இதுபோன்ற ஒரு நிலையையே யாகும். எளிவந்தது ஊன், உயிர், உணர்வு என்பவற்றை நாம் அறிவோம். உடம்பு கட்புலனாவது; உயிர் இருப்பதை அறியலாம்; உணர்வு என்பது நான் என்ற தற்போதத்தை உண்டாக்குவது. ஊனில் (உடம்பில்), உயிர், உணர்வு என்பவை எங்கே உள்ளன என்று கூறல் இயலாது. அகத்தும் புறத்தும் இவை மூன்றும் நிறைந்து நிற்றல் போல், அவனும் பூதங்களின் பரிணாமமான பொருள்களில் உள்ளான். இறப்ப உயர்ந்ததாய இப்பொருள், உயிர்களின் துயர் துடைக்கவே இழிந்தது; கொடுமையை ஏற்றுக்கொண்டது; கோல் துறந்தது; கானும் கடலும் கடந்தது. ஏன்? பிறர் துயர்துடைக்கவே அன்றோ! எனவே இப்பொருள், உயிர்கள் மாட்டுக் கொண்டுள்ள அருளின் ஆழத்தை அறிய முடிகிறது. பரம்பொருள்கூட இழிந்து இடர்தீர்க்க வரும்பொழுது பிறர் செய்யும் கொடுமையைத் தான் தாங்கிக்கொள்ள நேரிட்டது என்றால், நம்மைப் போன்றோர் பிறர்க்கு உபகாரம் செய்ய முற்பட்டால், பல துன்பங்களையும் ஏற்றுத்தான் செயல்பட வேண்டிவரும் என்ற அறவுரை குறிப்பெச்சம் (Sauggestion). பூதங்களில் உறைபவன் - ஐம்பெரும் பூதம் எனும் எல்லாப் பொருள்களிலும், உயிர்களிலும், உள்ளும் புறமுமாய்க் கலந்து நிற்கின்றான் எனில், ஒரு வினாத் தோன்றும். இப்பொருள்கள் தத்தம் இயல்பில் மாறுபட்டவை. ஒன்று சூடு; மற்றொன்று அதன்