பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 + கம்பன் - புதிய பார்வை எதிராகக் குளிர்ச்சியுடையது. ஒன்று திண்மையான பருப்பொருள்; மற்றொன்று மென்மையான நீர்ப்பொருள்; பிறிதொன்று நுண்மையான வாயுப்பொருள். ஒன்றுக் கொன்று முற்றிலும் முரண்பட்டு நிற்கும் இப் பொருள் களினுள்ளும், புறத்தும், ஒருவன் நின்றான் என்றால், ! அவனும் இந்த மாறுபாடுகளுக்கு உள்ளாகிவிடுவானோ என்ற ஐயம் நியாயமானதே! அந்த ஐயத்தைப் போக்கு கிறான், ஆரண்ய காண்டம், கடவுள் வாழ்த்துப் பாடலில், பேதியாது நிமிர் பேத உருவம் பிறழ்கிலா ஆதிநாதர் அவர்நம் அறிவினுக்கு அறிவு அரோ! நிமிர்பேத உருவம் - மேலும் மேலும் வளர்கின்றதும், ஒன்றுக்கொன்று மாறுபட்டதுமான உடம்புகள்; பேதியாது தான்மட்டும் வேறுபடாமல் இருந்துகொண்டே பிறழ்கிலா - ஊடுருவி வேறுபடாமல் நிற்பவரே; ஆதிநாதர் - மூலப் பரம்பொருள்; அவர்.அரோ - அவரே நம் அறிவினால் ஆராய்ந்து காணவேண்டிய அறிவு வடிவானவர்.) மாறுபட்ட உடம்புகள் தோறும், அம் மாறுபாட்டுக்கு ஏற்பத் தவறாமல் அவற்றுள் உறைபவன்; ஆனாலும், அவன் மட்டும் மாறுபடாதவன் என்ற இக்கருத்தைத் திருவாசகமும், பூதங்கள் தோறும் நின்றாய் எனில் அல்லால் - போக்கிலன், வரவுஇலன், எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டு அறியோம் உனைக்கண்டு அறிவாரை (திருப்பள்ளி எழுச்சி - 5) என்று பேசிச் செல்கிறது. - அனைத்துமாய் இருப்பது இதுவே இவை அனைத்தாலும், கம்பன் ஒரு கருத்தை வலியுறுத்த விரும்புகிறான். பரம்பொருள் என்பது வாக்கு, மன, லயம் கடந்ததாயினும் எங்கோ உள்ளது என்று