பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 217 நினைப்பது தவறு; அது எங்கும், எப்பொழுதும், நீக்கம் அற நிறைந்து நிற்பது என்பதைத்தான் கூற வருகிறான். இதே கருத்தைப் பிரகலாதன் கூற்றாகப் பின்னரும் பேசுகிறான்: உலகு தந்தானும், பல்வேறு உயிர்கள் தந்தானும் உள் உற்று உலைவு இலா உயிர்கள் தோறும் அங்கு அங்கே உறைகின்றானும் மலரினில் வெறியும், எள்ளில் எண்ணெயும். இரணியன் வதைப்படலம் - 120) என்கணால் காண்டற்கு எங்கணும் உளன்காண் நின் கணால் நோக்கிக் காண்டற்கு எளியனோ? இரணியன் வதைப்படலம் - 12) தோன்றலும் இடையும் ஈறும் தொடங்கிய பொருள்கட்கு எல்லாம் சான்று அவன்....................... ( – 122) (உலகைப் படைத்தவனும் (பருப்பொருள்கட்குக் குறியீடு), உயிர்களைப் படைத்தவனும் (நுண்பொருள் கட்குக் குறியீடு), என்றும் உள்ளதாகிய உயிர்கள்தோறும் உயிருக்குயிராய் உள்ளே உறைபவனும் ஆன அவன், மலருள் வாசனையும், எள்ளுள் எண்ணெயும் போல உள்ளான். என்னால் அவனைக் காண முடியும் - உன்னால் காண முடியாது. உலகிலுள்ள பொருள்கட்கு எல்லாம் தோற்றம், வாழ்வு, முடிவு என்பன உண்டு! இவை நடைபெற அவற்றுக்கெல்லாம் சான்றாக நிற்பவன்.) மலரில் மணம் மலர்ந்து வெளிப்படுமுன் எங்கே இருந்தது? அதே போலத்தான், இப்பொருள்களின் உட்கலந்தே இறைவன் இருக்கிறான். பிரகலாதன், "நான்