பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 219 சீலமும், அவைதரும் திருவும் ஆய், உளன் ஆலமும் வித்தும் ஒத்து அடங்கும் ஆண்மையான் (" 59,63.74) (எல்லா உலகங்களையும் தன்னுள்ளிருந்தே படைத்து அவற்றினுள் வாழும் உயிர்களாய்ப் பல வடிவெடுத்து நிற்பதுடன், அவற்றினுள் எள்ளில் எண்ணெய் போல் தங்குபவன், முன்னும் பின்னும் இல்லாதவன், இத்தனை செய்தும் தன் நிலை மாறுபடாதவன் ஆகிய, அப் பரம் பொருளின் பழைய நிலை இது என்று ஒருவரால் துணிந்து சொல்லக் கூடியதோ? மேல், நடு, கீழ் எனும் மூவகைப்பட்ட உலகங்களின் வடிவாகியும், சத்துவம், ராஜசம், தாமசம் எனும் முக்குணங்களாகியும், அஃறிணை (யாவை) உயர்திணை (எவருமாய்) என்ற இரண்டாகியும், எண்ணிக்கை கடந்த பல்வேறு வேறுபாடுகளை அடைந்தும், நீங்குதல் இல்லாத தனித்த நிலைமை உடையவன். பெரிய ஆலமரமும், அதன் தன்மை முழுவதையும் தன்னுள் அடக்கிய விதையும் போன்று வெளிப்பட்ட நிலை, அடங்கிய சூக்கும நிலை, இரண்டையும் உடைய பரம்பொருள், ஒரு தொழில் நடைபெறுகின்ற காலம், செய்வதற்குரிய கருவி, அதனால் பயன்விளையும் அப்பயனை அனுபவிக்கும் உயிர், நற்பண்புகள், அவற்றால் விளையும் பயன் என்று அனைத்துமாய் உள்ளான்.) இம்மூன்று பாடல்களையும் ஊன்றிப் பார்த்தால், கவிஞன் கடவுட் கொள்கை ஒரளவு விளங்கும். இவற்றின் படி, பரம்பொருளே அனைத்துமாய் இருக்கும் நிலை விளக்கப்படுகிறது. இத்தனை படைப்பு, காப்பு, அழிப்பு ஆகிய அனைத்தையும் அவன் பகுதியாக உள்ள பிரபஞ்சத்தை ஒட்டிச் செய்கிறான். படைப்பவனும், படைக்கப்படு பொருளுமாய் உள்ளவனும் அவனே!