பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 + கம்பன் - புதிய பார்வை தலைவனாக இருந்து உயிர்கட்கு அனுபவப்பொருளை வழங்குகிறான். உயிர்களாக இருந்து அவற்றை அனுபவிப்பவனும் அவனே! காலத் தத்துவமாக இருப் பவன் அவனே! அத்தத்துவத்தில் விளைந்து மறையும் பிரபஞ்சமாக இருப்பவனும் அவனே! மேலே மூன்றாவது பாடலில் கவிஞன் கூறிய கருத்தைத் திருவாசகம் "ஞாலமே! விசும்பே! இவை வந்துபோம் காலமே! உனை என்று கொல் காண்பதே?” (சதகம்-43) என்று கூறுகிறது. இரட்டைகள் அவனே! இந்த விளக்கத்தினால் ஒரு வினா பிறப்பது நியாயமே. அனைத்தையும் படைத்தவன் அவனே என்றால், அவன் படைத்த பிரபஞ்சத்தில் எத்தனை இன்னல்கள்! எத்தனை கொடுமைகள்! இவையெல்லாம் யாருடைய படைப்பு? படைத்தவனையே இல்லையென்று கூறும் இரணியன் போன்றோரின் ஆணவம் யாருடைய படைப்பு? பிற நாடுகளில் தோன்றிய சமயங்கள் குற்றம், கொடுமை, தீமை என்பன இறைவனால் படைக்கப்பட்டவை என்று கூறினால், அவனுடைய கருணைத் திறம் கெட்டுவிடும் என்று அஞ்சித் தீமை என்பது இறைவனுக்கு அப்பாற் பட்டு இயங்குவது என்று கூறலாயின. ஆனால், இத்தமிழ் நாட்டார் அனைத்தும் இறைவனே என்று கூறிவிட்ட மையின், நன்மை-தீமை, உறவு-பகை; ஒளி-இருள், என்ற அனைத்தும் அவனே எனக் கூறினர். வாலியின் கூற்றாக இக்கருத்தைக் கம்பநாடன் பேசுகிறான். மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ! மற்றும் நீ பாவம் நீ! தருமம் நீ! பாகை நீ உறவும் நீ (வாலி வதைப்படலம்-129) தேறும் வகை நீ! திகைப்பும் நீ தீமை நன்மை முழுதும் நீ (திருவாசகம்-குழைத்த பத்து-5)