பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 + கம்பன் - புதிய பார்வை என்று கேட்கிறான். அவன் கருத்துப்படி, இலங்கையில் தன் அனுமதி இன்றி நுழையக் கூடியவர்கள் இவர்களே! எனவே, நீ யார் என்ற வினா நியாயமானதே! இந்த வினாக்களைக் கேட்ட அனுமன், சொல்லிய அனைவரும் அல்லேன், சொன்ன அப் புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலேன்............ ( "–74) (நீ கூறிய பட்டியலில் உள்ள யாரும் அல்லன் நான். அந்த அற்பமான சக்தியுடையவர்கள் மாட்டு ஏவல் செய்யவும் இல்லை என்றான்.) இவ்வாறு கூறிய அனுமன், செங்கண் ஒர் வில்லிதன் தூதன் யான் (74) என்று தொடங்கி, அவன் யார் என்று இராவணன் வினா எழுப்பவிடாமல், இவனே விடை கூற) முற்படுகிறான்: தேவரும் பிறரும் அல்லன்; திசைக்களிறு அல்லன்; திக்கின் காவலர் அல்லன், ஈசன் கைலைஅம் கிரியும் அல்லன் மூவரும் அல்லன்; மற்றை முனிவரும் அல்லன்............... ( *—77) (திசைக் களிறு-பூமியைத் தாங்கும் எட்டு யானைகள்; திக்கின் காவலர்-எட்டுத் திக்குப் பாலகர்கள், ஈசன்சிவன்; மூவர்-மும்மூர்த்திகள்.) வேதம் நேதி என்றது ஏன்? இதுவரைக் காட்டிய பல்வேறு பாடல்களிலிருந்து மும்மூர்த்திகளுள் ஒருவராய திருமாலை, இராமனாக வந்தவன் அல்லன் என்று கம்பன் திட்டவட்டமாகக் சுறுதலை அறிய முடியும். பிரம்மன், விஷ்ணு, ருத்திரன் என்ற மூவரும் தேவருள் முதல் தேவராவரே அன்றி, மூலப்