பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் r 5 எமக்கு எனவகுத்தன அல்ல மிகப்பல மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை தாங்காது பொழிதந்தோனே அதுகண்டு இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல் விரல்செறி மரபின் செவித்தொடக் குநரும் செவித்தொடர் மரபின் விரல் செறிக்குநரும் அரைக்கு அமை மரபின் மிடற்று யாக்குநரும் மிடற்று அமை மரபின் அரைக்கு ஆக்குநரும் கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை நிலம்சேர் மதர் அணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தாங்கு அறாஅ வருநகை இனிது பெற்றிகுமே (புறம்-378) (எமக்கென வகுத்தன அல்ல-எங்கள் அளவுக்கென்று செய்யப்படாத அருங்கலம்-ஆபரணம்; வெறுக்கைசெல்வம்; இலம்பாடு-வறுமை, ஒக்கல்-சுற்றம்; கடும்தெறல்-மிகுதியான அழிக்கும் வன்மை, மதரணிமதிப்புயர்ந்த அணிகள்; செம்முகப் பெருங் கிளை-சிவந்த முகத்தை உடைய குரங்கின் கூட்டம்.) பலரும் அறிந்த கதை இக் கவிஞர் அக்காலத்தில் வழங்கிய இராமகாதையில் ஒரு நிகழ்ச்சியைப் போகிற போக்கில் கூறும் முறை யிலிருந்து ஒன்றை அறிந்துகொள்ள முடிகிறது. உவமையில் இந்நிகழ்ச்சியை வைத்துக் கூறுவதனால், மக்கள் மத்தியில் இக்கதை பலருக்கும் நன்கு தெரிந்ததாக இருந்திருக்க வேண்டும் என்பதை ஊகிக்க முடிகிறது. இதேபோன்று அகநானூற்றுப் பாடல் ஒன்றிலும் இராமகாதை நிகழ்ச்சி ஒன்று பேசப்படுகிறது. காதலில் ஈடுபட்டிருக்கும் தலைவி ஒருத்தியைப்பற்றி ஊரார்