பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 223 பரம்பொருள் அல்லர் என்பதைத்தான் கவிஞன் அடிக்கடி நினைவூட்டுகிறான். ஆனால், இப்பாடலில் இவன் அல்லன்; அவன் அல்லன் என்று எதிர்மறை முகத்தால் மட்டுங்கூறுவது சிறப்புடையதன்று; உடன்பாட்டு முகமாக ஒன்றை நிறுவ வேண்டும். சொல்லும் கற்பனையும் கடந்து நிற்கும் பொருளை எவ்வாறு சொற்களால் உடன்பாட்டு முறையில் விளக்க முடியும்? மூலப் பரம்பொருள் இதுவா? இதுவா? ஆம்! இதுவும் இதுவும், எல்லாம் அதுவே என்ற கூறிவிடலாம். இதன் எதிராக வினாவைச் சற்று மாற்றி இது பரம்பொருளா? என்றால் என்ன விடை கூறுவது? இந்த வினா ஆபத்தான வினாவாகும். ஆம்' என்று விடை கூறினால் பெருந்தவறு நேர்ந்துவிடும். இது பரம்பொருளா? என்ற வினாவிற்கு "ஆம்" என்று கூறினால் இது தவிரப் பிறவெல்லாம் பரம் பொருள் அல்ல என்றாகி விடுமே! இது கருதியே வேதம் நேதி இதுவல்ல) என்றே விடைகூறிச் சென்றது. வேதமே உடன்பாட்டு முறையால் அதனை விளக்க முடியாமல் நேதி என்ற சொல்லால் கூறப் புகுந்தது என்றால், ஏனையோர் என்ன செய்ய முடியும்? உடன்பாட்டு முகத்தால் கூற முடியுமா? கம்பநாடன் உடன்பாட்டு முகத்தால் அதனை விளக்க முடியுமா என்ற முயற்சியில் ஈடுபடுகிறான். இதில் ஒரு வேடிக்கையும் செய்கின்றான். இராவணன், சிவன் முதல், தேவர்கள், திசைக்களிறுகள், மும்மூர்த்திகள் ஆகிய அனைவரையும் நேரே கண்டுள்ளான். அவர்கள் அனைவருடனும் போரிட்டோ, பகைத்தோ வாழ்ந்துள் ளான். ஆனால் தசரதன் மகனாம் தாசரதியை மட்டும் தான் அவன் கண்டதில்லை. இராவணன் மட்டுமே கண்டிருப்பவர்கள் மேலே கூறிய கூட்டத்தார். ஏனையோர் யாரும் இவர்களை நேரே காணும் சக்தி இல்லாதவர்கள். பிறர் யாருங் கண்டிராத மும்மூர்த்திகள் முதலாயினோரை