பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 + கம்பன் - புதிய பார்வை இராவணன் கண்டுள்ளான். உலகத்தில் அவன் காலத்தில் வாழ்ந்தவர்கள் அனைவரும் கண்டிருக்கும் இராமனை மட்டுமே அவன் கண்டதில்லை. எனவே, அனுமன், இராவணன் கண்டிருக்கக் கூடிய தேவர், திசைக்களிறு, திக்பாலகர்கள், சிவன், மும்மூர்த்திகள் ஆகிய யாரும் அல்லன் என்று கூறிவிட்டு, எல்லைப் பூவலயத்தை ஆண்ட புரவலன் புதல்வன் போலாம் (பிணி வீட்டு படலம்-77) என்று கூறி மேலே செல்கிறான். இதற்குமேல், ஆயிரமறைப் பொருள் உணர்ந்து அறிவு அமைந்தவனாய, இராவணன், புரிந்துகொள்ளும் முறையில், இறை இலக்கணத்தை உடன்பாட்டு முகத்தால் விளக்க முற்படுகிறான் அனுமன். போதமும், பொருந்து கேள்விப் புரையறு பயனும், பொய்தீர் மாதவம் சார்ந்த தீரா வரங்களும், மற்றும், முற்றும் யாது அவன் நினைந்தான், அன்ன பயத்தன, எது வேண்டின் வேதமும் அறனும் சொல்லும்; மெய் அறமூர்த்தி, வில்லோன் ( *—78) (ஞான விசாரணை, பொருத்தமான கேள்வி ஞானம், உண்மையான தவத்தின் விளைவு ஆகியவற்றின் பயன் என்பவை உண்டல்லவா, அப்பயன் யாதாக இருக்கும் என்று நினைக்க வேண்டா, மெய் அறத்தின் வடிவானவனும், இப்போதைக்கு வில்லைத் தாங்கி வந்தவனும், ஆகிய இவன். என்ன நினைக்கின்றானோ, அதுவேதான் பயனாக விளையும். இதற்குச் சான்று வேண்டும் என்று கேட்கிறாயா? நீ கற்ற வேதமும், நீ மறந்துவிட்ட அறனுமே சான்று.)