பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 கம்பன் - புதிய பார்வை என்றே நினைய வேண்டியுளது. மேலே குறிக்கப்பட்ட பாடலை அடுத்து வரும் பாடலில், கஜேந்திர மோட்சம் பற்றி அனுமன் பேசுகிறான். காரணம் கேட்டி ஆயின், கடைஇலா மறையின் கண்ணும் ஆரணம் காட்ட மாட்டா, அறிவினுக்கு அறிவும் அன்னோன் போர் அணங்கு இடங்கர் கவ்வ, பொதுநின்று முதலே' என்ற வாரணம் காக்க வந்தான் அமரரைக் காக்க வந்தான். - (பிணி வீட்டு படலம்-78) (என்ன காரணம் என்று கேட்பாயாகில், முடிவில்லாத வேதமும், உபநிடதங்களும் சுட்டிக்காட்ட முடியாதவனாய், எது என்று ஆய்ந்து சொல்லும் அறிவைக் கொண்டு செலுத்தும் அறிவாகவும் உள்ளவன் அவன். போரிடவல்ல முதலை, காலைக் கவ்வியவுடன், இன்னான் என்று பெயரிட்டுக் கூறாமல் அனைத்துப் பொருளுக்கும் மூலகாரணமாக உள்ள முதற்பொருளை முதலே' என்று அந்த யானை அழைக்கவும், அதனைக் காக்க அன்று வந்தவன் இன்று அமரரைக் காக்க வந்தான்.) இப்பாடலில் கம்பன் தன் கருத்தை நுண்மையாகப் பெய்கின்றான். இப்பாடல் அனுமனால், இராவணன் முன்னிலையில் கூறப்பெற்ற ஒன்றாகும். இதே அனுமன் சில பாடல்களின் முன்னர் (74ஆம் பாடலில்) மும்மூர்த்தி களையும், புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலேன் என்று பேசுகிறான். அங்ங்ணம் கூறிய அதே அனுமன், சில பாடல்களின் பின்னர் திருமாலே என்று யானை அழைத்தது என்று கூறுவதில் உள்ள இடர்ப்பாட்டை நன்கு அறியலாம். எனவேதான் பொது நின்று என்ற