பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 227 சொல்லைக் கம்பன் காரணத்துடன் பெய்கிறான். அடுத்து முதலே என்று அழைத்தது என்றும் கூறுகிறான். இனி அடுத்துவரும் பாடல், இந்த உலகம் உள்ள அளவு நின்று நிலைபெற்றுக் கம்பனுக்குப் பெருமை சேர்க்கக்கூடிய பாடலாகும். ஒரு நாம் ஒர் உருவம் ஒன்றும் இல்லாத பரம்பொருளுக்கு ஆயிரம் திருநாமம்’ (திருவாசகம்-தெள்ளேணம்-1) பாடியுள்ளனர் நம் முன்னோர் என்றாலும், எல்லை ஒன்றில்லாத அப் பொருளுக்குக் கம்பன் ஒரு பெயர் தருகிறான். அப் பெயரைக் காரணப் பெயராகவும் அமைக்கிறான். பாரதியைக் கவர்ந்த பாடல் இந்த ஒரே பாடலில், நம் காலத்தே வாழ்ந்த கவிச் சக்கரவர்த்தி பாரதி ஈடுபட்டதுபோல், கம்பன் இராமகாதையை இயற்றிய நாளிலிருந்து வேறு யாரும் ஈடுபட்டார்களா என்பது ஐயத்துக்குரியதே! இராம காதையை வான்மீகத்திலும் கற்றவன் பாரதி. எனவே கதையில் ஈடுபட்டான் என்று கூறுவது அத்துணைப் பொருத்தமாகப் படவில்லை. மேலும், கிருஷ்ணாவ தாரத்தில் பாரதி ஈடுபாடு கொண்டதுபோல இராமவ தாரத்தில் ஈடுபாடு கொண்டான் என்றும் கூற முடியாது என்றாலும், கம்பன் பிறந்த தமிழ்நாடு என்று போற்றக் காரணம் எதுவாக இருக்கும்? என்று சிந்திப்பதில் தவறு இல்லை. கம்பநாடன் கவிதையில் போல் கற்றோர்க்கு இதயம் களியாதே' என்று, பிற்காலக் கவிஞர் ஒருவர் பாடியது போலக் கவிதை அழகில் மற்றொரு கவிஞன் ஈடுபட்டான் என்று கூறலாம். ஆனால் அதுவன்று பாரதி ஈடுபட்ட பகுதி. இதனைப் பாரதியே மற்றோர் இடத்தில் கூறுகிறான். இத்தமிழர்களின் துரதிர்ஷ்டம் அந்தப் பாடல் முன்னும் பின்னும் அகப்படாமல் 'பெருங் கதை' கிடைத்தது போலக் கிடைத்துள்ளது என்றாலும், கவி