பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 கம்பன் - புதிய பார்வை அரசன் பாரதி இத்தமிழ்ப் பண்பாட்டின் ஆணிவேரை உறுதியாகக் கண்டு கூறும் பகுதி நல்ல வேளையாக அழியாமல் கிடைத்துவிட்டது. தமிழ்ச் சாதி என்ற தலைப்பில் இக்காலத்த்வர் இப்பாடலை வெளியிட் டுள்ளனர். 1937இல் இருதலைக் கொள்ளியின் இடையே என்ற தலைப்பில், முதலும் கடையும் இல்லாமல், இது அச்சிடப் பெற்றுள்ளது. - சிலப்பதிகாரச் செய்யுளைக் கருதியும், திருக்குறள் உறுதியும் தெளிவும், பொருளின் ஆழமும், விரிவும், அழகும் கருதியும் எல்லை ஒன்று இன்மை எனும் பொருள் அதனை கம்பன் குறிகளால் காட்டிட முயலும், முயற்சியைக் கருதியும், முன்பு நான் தமிழச் சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று உறுதிக் கொண்டிருந்தேன்! ஒரு பதினாயிரம் சனிவாய்ப்பட்டும் தமிழச் சாதிதான் - உள் உடைவு இன்றி உழைத்திடு நெறிகளைக் கண்டு எனது உள்ளம் கலங்கிடாது இருந்தேன் - (தமிழச் சாதி-20-3) சிலப்பதிகாரத்தின் உள்ளுறை பொருளைக் கவிஞன் நினைத்தான். திருக்குறள் மனிதனுக்குக் கூறும் அறிவுரைகளில் உள்ள உறுதி, தெளிவு, கூறும் கருத்துக்களில் ஆழம், சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் இயல்பு, கவிதை அழகு என்பவற்றை உளங்கொண்டான். எல்லையில்லா இயல்புடைய இறைப்பொருளைக் கம்பன் குறியீடுகளைப் பயன்படுத்தி விளக்க முயன்ற முயற்சியைக் கருதினான். இம்மூன்று நூல்களைப் படைக்கும் ஆற்றலுடைய ஒரு சமுதாயத்தை, அதன் பண்பாட்டை, யாரும் அழிக்க முடியாது. அது அமரத்துவம் வாய்ந்தது என்று இருந்தான். தமிழக வரலாற்றைப் படித்த அவன், பதினாயிரம் சனியன்கள் இத்தமிழச் சாதியை அதுவரை பிடித்தாலும்கூட, அந்த இனம், உள்ளம் உடைந்து,