பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 229 விடாமல், மேலும் மேலும் உழைத்து, முன்னேறும் இயல்பைக் கண்டு மனங்கலங்காமல் இருந்தானாம். சிலம்பை ஏன் கூறினான்? இந்த மூன்று நூல்களைக் கவிஞன் தேர்ந்தெடுக்கக் காரணம் யாதாக இருக்கும்? வெறும் கவிதை அழகில் ஏமாறும் தரமுடையவனல்லவன் இக்கவிஞன். எனவே, வேறு ஏதோ ஒரு காரணம் பற்றியே இம்மூன்றையும் அவன் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்று கருதுவதில் தவறு இல்லை. முதலாவது பெண்களைப் பற்றி அவன் மிக உயர்ந்த எண்ணங் கொண்டிருந்தான், உலகம் இயங்கும் ஆற்றலுக்கு மூலகாரணமாக உள்ள ஆற்றலை, அவன் அன்னை பராசக்தி என்றே கருதினான். அடுத்துக் கொடுங்கோன்மையைச் சாட வேண்டும் என்று உறுதி பூண்டிருந்தான். இவை இரண்டையும் ஒரு சேர உரைப்பது சிலம்பு முன்பின் தெரியாத ஊரில் ஒரே துணையாக இருந்த, கணவனையும் இழந்த, இளமங்கை ஒருத்தி, ஒற்றையாகவே சென்று ஒரு பெரிய அரசனிடம் வழக்காடி, அவன் கொடுங்கோன்மையை அறிவுறுத்தினாள் என்றால், சிலம்பில் கவிஞன் ஈடுபட்டதில் புதுமை இல்லை. திருக்குறள் ஏன் எடுத்தான்? - அறத்தைப் பற்றியே மானிட வாழ்வு நடைபெற வேண்டும் என்ற உறுதிகொண்டவன் கவிஞன். மனிதனின் நிற, இன, வேற்றுமைகள் எவ்வாறு இருப்பினும், அறம் மானிட சாதி முழுவதுக்கும் பொது என்பதை நம்பினவன் கவிஞன். எனவே, தமிழ் இனத்துக்கு மட்டும் அல்லாமல், உலகம் முழுவதற்கும் நீதி கூறிய பெருமை குறளுக்கு உண்டு. அதனால்தான், வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாடினான். பெரும்பான்மையான நீதிநூல்கள், தாம் தோன்றிய