பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 + கம்பன் - புதிய பார்வை சமுதாயத்துக்கு மட்டுமே பயன்படும் முறையில் தோன்றின. மேலும் பல நீதிநூல்கள் காலத்தைக் கடந்து நிற்கும் ஆற்றல் பெறவில்லை. ஆனால், திருக்குறள் காலங்கடந்து நிற்கும் பேராற்றல் படைத்தது. தோன்றிய காலத்தில் எவ்வாறு முற்றிலும் பயன்பட்டதோ அவ்வாறே இன்றும், முழுவதும் பயன்படும் நிலையில் உள்ள ஒப்பற்ற நீதி நூல். எனவே அதன் அழுத்தம், ஆழம், விரிவு முதலியவற்றைப் பற்றிக் கூறினான். - கம்பனைக் கூற காரணம் - இவை இரண்டு நூல்களும் தோன்றிய சமுதாயம் ஒப்பு உயர்வு, அற்ற பெருமை உடையதாய் இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயம் இல்லை. ஆனாலும், அந்தச் சமுதாயம் முழுத்தன்மை பெற்றதாக இருக்க முடியாது. பகுத்தறிவு படைத்த மனிதன் தான் யார்? ஏன் இந்த உலகிடைத் தோன்றினோம்? இவ்வாழ்வின் குறிக்கோள் என்ன? இந்த அண்ட பேரண்டங்களும், ஒரு நியதிக்குக் கட்டுப்பட்டு நடைபெறுகிறது என்றால் இதன் மூலகாரணம் யாதாக இருக்க முடியும்?' என்பவை முதலான ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கடவுட் பொருளை ஒரளவு அறிந்து, பேரளவு உணர்ந்து, வாழ்க்கையை நடத்தினால்தான் அது முழுவாழ்வு என்று கருதப்படும். எனவேதான் கம்பன் எல்லையில்லாத பொருளைக் குறிகளால் காட்டிட முயன்றதை இக்கவிஞன் ஆராய்கிறான். உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அறம், நீதி கூறுவது குறள். இந்த அறவாழ்வை மேற்கொண்டு வாழ்ந்து, அச்சம் என்பதை அறவே விட்டொழித்து, நாட்டைத் திருத்த முயன்ற பெண் வரலாறு கூறுவது சிலம்பு, பெண்ணாகப் பிறந்து ஒரே பிறப்பில் தெய்வத் தன்மையை அடைந்தாள் ஒருத்தி. இனி இவை இரண்டும் உள்ள இடத்தில் தான் இறைப் பொருள் பற்றிய உணர்வும்,