பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<令l。母。 ஞானசம்பந்தன் + 231 அறிவும் ஏற்படும். எனவே அந்த இறைப்பொருள் பற்றிக் குறியீடுகளால் பேசியவன் கம்பன். இம்மூவரையையும் பற்றிப் பாரதி கூற, இவையே காரணங்களாகும் என்று நினைய வேண்டி உள்ளது. - இறைப்பொருளைச் சொற்களால் கூற முடிந்துவிட் டால் அது கடவுளாகாது. வாக்கு, மனம், கடந்த அதை யாரும் முற்றிலுங் கூறிவிட முடியாது. எனவேதான் கவிஞன் காட்டிட முயலும் முயற்சி என்று பேசுகிறான். கவியரசன், பாரதி, தான் ஈடுபட்ட மூன்று நூல்களையும் குறிப்பிட்டு, இத்தகைய நூல் செய்யும் திறனுடைய சமுதாயத்தை யாரும் எக்காலத்தும் அழிக்க முடியாது என்று தான் நம்பி இருந்ததாகப் பேசுகிறான். தமிழக வரலாற்றை நன்கு அறிந்திருந்த கவிஞன் "பதினாயிரம் சனியன்கள் பிடித்தாலும் கவலை இல்லை! இத்தமிழச் சாதி உள்ளந் தளராமல் இருந்து வந்துள்ளது என்று நினைத்து மகிழ்ந்திருந்தேன். ஆனால் இன்றைய நிலையைக் காணும்போது இத்தமிழச் சாதி என்ன ஆகுமோ என்று ஐயுறுகின்றேன்” என்று பாடும் பகுதி அது. அதில் இளங்கோ கவிதை என்று வாளா கூறிவிட்டுத் திருக்குறளைக் குறிப்பிடும்போது அதன் உறுதி, தெளிவு, பொருள் ஆழம் என்ற மூன்றையுங் குறிப்பிடுகிறான். அடுத்துக் கம்பனைக் குறிப்பிட வருகையில் எல்லை யில்லாத பரம்பொருளை எவ்வாறு எடுத்து விளக்க முடியும் ? என்றாலும், இன்றுவரை கவிஞர்கள் அப் பொருளை எவ்வாறாவது சொல் கொண்டு விளக்க வேண்டும் என்ற முயற்சிக்கு அளவே இல்லை. எண்களை நேரே எழுதி உயர் கணிதம் போட இயலாமையினால் குறியீடுகளைப் (Symbols) பயன்படுத்துகின்றனர் அல்லவா? அக்கணித நூலாரும் எல்லையில்லாத ஒன்றை (infinity) எவ்வாறு குறிக்கின்றனர்? மாட்டுக் கொம்புகள்