பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 + கம்பன் - புதிய பார்வை இரண்டைப் படுக்கப் போட்டது போல ஒரு குறியீட்டை (அடையாளம்-Symbol) எழுதி, அது எண்ணிலி அல்லது எல்லை இன்மையைக் குறிப்பதாகக் கணித நூலார் ஏற்றுக் கொள்கிறார்கள் அல்லவா? அவனே முதற் காரணன்! அதேபோல, எல்லையில்லாத பரம்பொருளையும், அதன், செயல்களையும், அதற்கும் நமக்கும் இடையே உள்ள தொடர்பையும் எவ்வாறு குறிப்பது? சில குறியீடுகளை வைத்துக்கொண்டு எல்லையற்ற பொருளைப் பற்றிக் கூற முற்படுகிறான், கம்பன் என்று கண்டான் பாரதி. இராமகாதையில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் இறைப் பொருளின் குறியீடுகள் என்று காணுகின்றான் பாரதி. இராமன் அனைத்துமாக, எங்கும் நிறைந்தவனாக, என்றும் உள்ளவனாக, அனைத்திற்கும் காரணனாக இருக்கும் பரம்பொருளின் குறியீடு என்றால், இராவணன் யார்? அனைத்திலும் இருக்கும் பரம்பொருள் அவனிடம் இல்லையா? இல்லை என்று கூறுவது பரம்பொருளுக்கே இழுக்காகும். எங்கும் நிறைந்த பொருள் எப்படி தனி ஒருவனிடம் இல்லாமல் போய்விடும் : அன்றியும் அவன்தானே இவனேதான் அவ்வேத முதற் காரணன்? என்று பேசுகிறான்? எனவே அவனிடமும் பரம்பொருள் இருக்கத்தான் செய்கிறான். ஆனால் இராவணனிடம் நிறைந்திருந்த அகங்காரம் என்னும் களிம்பு, அவனுள் இருக்கும் பரம்பொருளை அவனும் அறியாமல் செய்து விட்டது. இந்த அகங்காரந்தான் இராமனை இன்ன்ான் என்று அறிந்துங் கூட, அவனிடம் பணிய மறுத்துவிட்டது. 'யாரேனும்தான் ஆகுக! யான் என் தனி ஆண்மை பேரேன் என்று பேசுமாறு செய்கிறது. இராமன் முதல் இராவணன் வரை, குகன் முதல் வீடணன் வரை அனைவரிடத்தும் பரம்பொருள் நிறைந்துதான் உள்ளான். அவரவர்