பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 * கம்பன் - புதிய பார்வை பழிதூற்றிக் கொண்டிருந்தனராம். ஒருநாள் அத்தலைவி அத்தலைவனையே மணம் முடித்துக்கொண்டாள். அன்றே ஊரார் வாய் அடங்கிப் போயிற்றாம். அதுவரை ஊர்ப்பெண்கள் பழிதுாற்றிக் கொண்டிருந்தது, மாலை நேரத்தில் மரக் கூடுகளில் வந்து பறவைகள் கலகல என்று பெருஞ் சப்தம் செய்துகொண்டிருப்பதைப் போல் இருந்ததாம். அவ்வாறு பறவைகள் ஓயாது ஒலி செய்துகொண்டிருந்த ஒரு மரத்தின் அடியில், இலங்கைப் படையெடுப்பின்போது இராமன் வந்து தங்கித் தன் உடன் வந்தவர்களுடன் மந்திராலோசனை தொடங்கினானாம். அவன் கூட்டம் தொடங்கியவுடன் மரத்தின்மேல் இருந்த பறவைக்கூட்டம் கப்' என்று தம் ஒலிகளை அடக்கிக் கொண்டனவாம். இந்தப் பறவைகளைப் போலவே கலகலவென்று பழிதூற்றிக் கொண்டிருந்த பெண்கள் அப்பறவைகள் ஒலி அடங்கியதைப் போலத் திருமணத் தின் பின்னர் வாயடைத்துப் போயினராம். இக்கருத்தை வெல்வேல் கவுரியர் தொன்முது கோடி முழங்கு இரும் பெளவம் இரங்குமுன் துறை வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த பல்விழ் ஆலம்போல - ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே (அகம்-70) என்று பேசுகிறது. (கவுரியர்-பாண்டியர்; தொன் முது கோடிபழமையான தனுஷ்கோடி. பெளவம்-கடல். அருமறைமந்திராலோசனை; பல்வீழ் ஆலம்-பல விழுதுகளை யுடைய ஆலமரம்.) இவ்விரண்டு நிகழ்ச்சிகளும் வான்மீகத்திலோ, கம்பனிலோ இடம்பெறவில்லை என்பதையும் அறிதல் வேண்டும். எனவே ஆதிகாவியம் என்று போற்றப்பெறும்