பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 233 புலனடக்கம், அகங்கார மமகார மாய்வு என்பவற்றிற்கேற்ப உள்ளே இருப்பது வெளிப்படுகிறது. இத்தனை பாத்திரங்களும் குறியீடுகளாக நின்று, அந்த எல்லை இல்லாத பொருளின் பல்வேறு நிலைகளைக் காட்டுகின்றன. எல்லாவற்றிற்கும் அவன் முதற்காரணனாக உள்ளான். முதல் காரணம் என்பது அதுவே காரியமாக மாறுவது. துணைக் காரணம் என்பது முதல் காரணம் காரியமாக மாறும்வரை (மண்சட்டியாக மாறும் வரை) உதவியாக நிற்பது குடத்திற்கு மண்தான் முதற் காரணம். தண்டம், சக்கரம் முதலியன துணைக்காரணம். இராவணன் இவன் வேத முதற்காரணன் என்று சொல்வதன் பொருள் ஆழம், ஆய்ந்து அறிதற்குரியது. அதுவே அதுவாதல். மண்ணே சட்டியாக மாறுதல், முதுற்காரணம். எனவே, இராமன் பரம்பொருளே என்று பேசுகிறான். இவ்வளவு பெரிய காப்பியத்தின் உள்ளுறை பொருளாக அமைவது பரம்பொருளின் விளையாட்டே என்பதை உணர வைக்கிறான் கவிஞன். இக்கருத்தைச் சற்று விரிவாக நூலுள் பல இடங்களில் குறிப்பிட்டுக் காட்டுகிறான். ‘. - ஒதம் கொள் கடல் அன்றி, ஒன்றினோடு ஒன்று ஒவ்வாப் பூதங்கள் தொறும் உறைந்தால், அவை உன்னைப் பொறுக்குமோ? (விராதன் வதைப் படலம்-47) (குளிர்ந்த கடலில் மட்டும் அல்லாமல் ஒன்றுக்கு ஒன்று அடிப்படையில் மாறுபட்டுள்ள பஞ்ச பூதங்களிலும் நீயே உறைவதால், அவை உன்னை எவ்வாறு தாங்கு கின்றன :) - * - - காண்பார்க்கும், காணப்படு பொருட்கும், கண் ஆகி பூண்பாய் போல் நிற்றியால், யாது ஒன்றும் பூணாதாய்! (கவந்தன் வதைப் படலம்-42) (காண்பான், காணப்படுபொருள் என்ற இரண்டையும் தொடர்புபடுத்தும் கண்ணாக நிற்பாய்; அனைத்தையும்