பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 கம்பன் - புதிய பார்வை அணிபவன் போல் காணப்பட்டாலும் யாது ஒன்றிலும் தோயாது நிற்பாய்.) தோய்ந்தும், பொருள் அனைத்தும் தோயாது நின்ற தொல்சுடரே!.......................... * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *வேதம் நெறிமுறையின் தேடி ஆய்ந்த உணர்வின் உணர்வே! (சரபங்கப் படலம்-27). (எல்லாப் பொருள்களாகவும் நின்றும், அவை ஒன்றிலும் தோய்தல் இல்லாமல் இருப்பவனே! வேதம் தனக்கென வழிவகுத்துக் கொண்டு அவ்வழியே ஆய்ந்து சென்று கண்ட, அறிவிற்குள் அறிவாக உள்ளவனே!) மேவாதவர் இல்லை, மேவினவர் இல்லை; வெளியோடு இருள் இல்லை, மேல் கீழும் இல்லை; மூவாதமை இல்லை, மூத்தமையும் இல்லை; முதல் இடையொடு ஈறு இல்லை; முன்னொடு பின் இல்லை. தேவா! இங்கு இவ்வோ நின்தொன்று நிலை........ (சரபங்கப் படலம்-28) (பகை என்பதில்லை, நண்பர் என்பதில்லை, ஒளியும் இல்லை, இருளும் இல்லை, மேலும் இல்லை, கீழும் இல்லை, இளமையும் இல்லை, முதுமையும் இல்லை, முதல், நடு இறுதி என்ற ஒன்றும் இல்லை, முன்பின் என்ற எதுவும் இல்லை. தேவனே!உன் பழமையான நிலை இதுவல்லவோ?) ஒன்று ஆகி, மூலத்து உருவம் பல ஆகி, உணர்வும் உயிரும் பிறிது ஆகி, ஊழி சென்று ஆசறும் காலத்து, அந்நிலையது ஆகித் திறத்து உலகம்தான் ஆகி, செஞ்செவே நன்று ஆய ஞானத் தனிக் கொழுந்தே! (ஒன்றாக இருந்த நீ, பல உடல்களைக் கொண்டு விரிந்து, அறிவு, உயிர் என்று வேறாகி, ஊழி முடியும் (சரபங்கப் படலம்-29)