பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 235 காலத்தில் அனைத்தையும் உன்னுள் அடக்கி, மறுபடி விரிந்து பல்வேறு உலகமாக மலர்ந்து நிற்கும் பரஞானத்தின் முடிமணியே.) ஒப்பற்ற ஒரு பாடல் இறுதியாக ஒரு பாடலைப் பார்த்தல் வேண்டும். பரம்பொருளுக்கு எத்தனையோ பெயர்கள் இருந்தும், கவிஞன் காரணன் என்ற பெயரை மட்டும் குறிப்பாகப் பயன்படுத்துகிறான் என்று கண்டோம் முதற்காரணனாய் அமைந்ததை முன்னர்க் கூறினான். அனைத்துக் கலையையும் சிக்கறத் தெளிந்ததுடன் அல்லாமல், தன் புலனடக்கத்தால் ஏனையோர் யாரும் எய்த முடியாத உயர்ந்த நிலையை அடைந்த அனுமன் இதோ பேசுகிறான். மூலமும் நடுவும் ஈறும் இல்லது, ஒர் மும்மைத்துஆய காலமும், கணக்கும், நீத்த காரணன், கைவில்ஏந்தி சூலமும், திகிரி சங்கும், கரகமும் துறந்து, தொல்லை ஆலமும், மலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான். (பிணிவீட்டு படலம்-80) எந்த ஒன்றுக்கும் ஒரு தோற்றமும், ஓர் இருப்பும் ஒரு மறைவும் உண்டு. யுகாந்த காலமாக உள்ளது என்று நாம் கூறும் இந்தச் சூரிய மண்டலமும், இச்சூரிய மண்டலம் போன்று ஆயிரக்கணக்கில் உள்ள சூரிய மண்டலங்களும், விண்வெளியில் உள்ள உடுக்கள் மண்டலமும், என்றோ ஒருநாள் தோன்றியவை: இன்று உள்ளவை; என்றோ ஒருநாள் அழியப் போகின்றவை. அழிதல் என்றால், இல்லாமற்போதல் என்று பொருள் இல்லை. இன்றுள்ள நிலை மாறி வேறு நிலையை அடைவதையே அழிவு என்று கூறுகிறோம். தண்ணிர் பனிக்கட்டியாகி, மறுபடியும் தண்ணிராக மாறி, அடுத்து ஆவியாகச் சென்று மறுபடியும் தண்ணிராக மாறுவது போல்தான் இந்த அண்டங்களின் உற்பத்தி, ஸ்திதி இருத்தல்), நாசம் (அழிவு) எனப்படுபவை.