பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 கம்பன் - புதிய பார்வை இந்த முதல் நிலை, இடைநிலை, கடைநிலைக்கு உட்படாத ஒருபொருள் இங்கும் இல்லை; எங்கும் இல்லை. ஆனால், இந்த மூன்று நிலையும் இல்லாத ஒன்று உண்டா? உண்டு! அது யாது? அதுவே பரம்பொருள் எனப்படும். அதற்குத் தொடக்கமும் இல்லை; இருக்கிறது எனப்படும் நடுவும் இல்லை; இல்லாது ஒழிந்தது எனக் கூறும் ஈற்று நிலையும் இல்லை. இருக்கும் ஒரு பொருளை இருக்கிறது என்று கூறும் நடுநிலையும் இல்லை என்று கூறுவது பொருத்தமா என்ற வினா எழும். முன்பு இல்லாதிருந்து ஒரு காலத்தில் மறுபடியும் இல்லையாக ஒழிந்து, இடைக்காலத்தில் மட்டும் இருப்பதைத்தான் இருக்கிறது என்ற நடுவே உள்ள நிலை என்று கூறுகிறோம். எனவே மூலம், நடு, ஈறு, இல்லாதது பரம்பொருள் என்று கூறுவது முற்றிலும் பொருத்தமே. எதிர்மறை முகத்தான் (By.Negation) ஒன்றை நிறுவ முற்படுவது நியாயம் ஆகாது என்னும் வாதத்தையும் உளங்கொண்டே கவிஞன் பேசுகிறான்; மூலமும் நடுவும் ஈறும் இல்லாதாகிய காரண்ன் என்பதால் காரணனாக உள்ள பொருளுக்குத் தரப்பட்ட இலக்கணமாகும் இது. காலமும் கணக்கு நீத்தது இனி அடுத்துவரும் பகுதி ஒர் மும்மைத்து ஆய காலமும் கணக்கும் நீத்த என்பதாகும். உலகத்தின் பழைய சமயங்கள் அனைத்துமே காலம் என்பதை அறிந்து, அதனைப் பகுதிகளாகப் பிரித்துள்ளன. பெரும்பான்மையானவர்கள் இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் எனக் காலத்தை மூன்றாகப் பிரித்துக் கூறுவர். பெளத்த சமயத்தார் நிகழ் காலம் என்ற ஒன்றை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் கணக்குப்படி இந்த வினாடி என்று கூறும்பொழுது, அந்த விநாடி காலாவதி ஆகி இறந்த காலத்துடன் சேர்ந்துவிடுகிறது. விநாடி என்று சொல்லத் தொடங்கி வி என்றவுடன் அது இறந்ததாகவும், நாடி என்பது எதிர்காலமாகவும் இருக்க,