பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 + கம்பன் - புதிய பார்வை கடந்தும் அனைத்தினுள்ளும் இருந்தும், அனைத்தையும் தோற்றுவித்தும் அனைத்தையும் காத்தும் அழித்தும் நிற்கும் அப்பொருளை ஏறத்தாழ முழுவதுமாகக் குறிப்பிட முடியுமோ, அந்த ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகிறான், அனைத்தும் தோன்றுதற்கும், இருத்தற்கும், அழிதற்கும் காரணமாக அவன் ஒருவனே இருத்தலின், கவிஞன் காரணன் என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறான். காரணன் என்று பொது உறக் கூறிவிட்டமையின் முதற் காரணமாகவும், துணைக் காரணமாகவும், நிமித்த காரணமாகவும் அவன் ஒருவனே உள்ளான் என்பது விளங்கும். மூவரும் ஒருவனானவன் இராமன் இவ்வளவு தருக்க ரீதியாகப் பேசிவிட்ட பிறகு, மும்மூர்த்திகள் என்று பேசி அதனையே பெரிது என ஏற்றுக்கொண்டுள்ள அவன் காலச் சமுதாயத்தையும் திருப்திப்படுத்த வேண்டிய கடமை இருத்தலின், சிவபெருமானும் (சூலம்), திருமாலும் (திகிரி சங்கு), நான்முகனும் (கரகம்) தமக்கு உரிய இடமாகிய ஆல் இலையையும் (திருமால்), மலரையும், (நான்முகன்), கயிலை மலையையும் (சிவன்) விட்டு, மூவரும் ஒரு வடிவு கொண்டு இராமன் என்ற பெயருடன் அயோத்தி வந்தார்கள். அப்படியானால், இத்துணைப் பெரியதும் சொற்பதம் கடந்ததுமான பரம்பொருள் ஏன் அயோத்தி வர வேண்டும் ? என்ற வினாவை எதிர்பார்த்து விடை கூறுகிறான் அடுத்த பாடலில், அறம் தலைநிறுத்தி, வேதம் அருள் சுரந்து அறைந்த நீதித் திறம் தெரிந்து, உலகம் பூணச் செந்நெறி செலுத்தித் தீயோர் இறந்து உக நூறி, தக்கோர் இடர் துடைத்து ஏக, ஈண்டு