பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 அ. ச. ஞானசம்பந்தன் 241 பிறந்தனன் தன் பொற்பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான் (பிணிவீட்டு படலம்-8) (அறத்தை நிலைநாட்டி, வேதம் மக்கள்மேல் கொண்ட அருளால் கூறிவைத்த, நீதியின் உட்பொருளை, இவ்வுலகம் அறிந்து மேற்கொள்ள அவர்களைச் செந்நெறியில் செலுத்தி, அதே நேரத்தில் தியோரை அழித்துத் தக்கவர்களைக் காத்து உதவவே இங்கு மனிதனாய்ப் பிறந்தான். எவன் தெரியுமா ? தன்னிடம் சரணம் புகுகின்றவர்கள் துயரத்தை மட்டுமல்லாமல் அவர்கள் பிறப்பையே போக்குபவன்.) - பரித்ராணய ஸாதூனாம் வினாசாய சதுஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே (பகவத் கீதை-4-8) என்று கீதையில் கண்ணன் கூறுகின்ற பாடலின் விரிவுரை ஆகும் கம்பனின் மேலே காட்டிய பாடல். அறத்தை நிலைநாட்டுதல் என்றாலே, மக்கள் நீதி தெரிந்து நடப்பது என்பதுதானே பொருள்! அப்படி இருக்க இரண்டையும் கவிஞன் ஏன் தனித்தனியாகக் கூறவேண்டும்? அவன் வந்த காலத்தில் அவன் ஆற்றலை நேரே காணுவதால் அறவழி நடக்கும் மக்கள், நாளடைவில் வழுக்கி விழ ஏதுவாகலாம் அல்லவா? எனவேதான் இரண்டாம் முறையாக, விரிவாக நீதித் திறம் தெரிந்து உலகம் பூணச் செந்நெறி செலுத்தி என்று கூறுகிறான். நீதித் திறத்தைத் தெரிந்து கொள்ளுதல் வேறு; அதனை ஏற்று வாழ்க்கையில் கடைப்பிடித்தல் வேறு. இராவணன் அனைத்து நீதிகளையும் பழுதறக் கற்றவன்தான்; ஆனாலும், அவன் வாழ்க்கை எவ்வாறு சென்றது? நீதியை எடுத்துச் சொன்ன வீடணன், கும்பகருணன் என்பவர்கள் பேச்சு அவன் செவியில் ஏறவில்லை அல்லவா? அதனால்தான் தெரிந்து என்று.