பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 + கம்பன் - புதிய பார்வை கூறிய கவிஞன், பூண்டு செந்நெறியில் செல்ல உதவினான்' இராமன் என்று பேசுகிறான். தண்டித்தலும் கருணையே உலகில் மக்கள் வடிவில் பிறந்து விட்டவர்களில், மரங்களின் இயல்புடையவர்கள், விலங்கு இயல்புடைய வர்கள், மனம் போனபடி வாழும் சில ஜன்மங்கள் என்ற முறையில் பல படித்தரம் உண்டு அல்லவா? ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்கணும் என்பது இந்நாட்டுப் பழமொழி. எனவே, ஒரு சிலருக்கு உபதேசம் செய்தால் போதாது. வள்ளுவப் பேராசான் இத்தகைய மக்களை நன்கு எடைபோட்டு 'அச்சமே கீழ்களது ஆசாரம்' (திருக்குறள்-10.75) என்று பேசுகிறார் அல்லவா ? அம்மட்டோடு நிறுத்தாமல், சொன்னவுடன் கேட்டுப் பயன்படுவர் சான்றோர்; கீழ்மக்களைக் கொன்றால் தான் அவர்களைத் திருத்த முடியும் என்ற கருத்தில். சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ் (திருக்குறள்-1078) என்றும் பேசுகிறாரல்லவா? எனவே அறத்தை நிலைநாட்டி நீதித்திறம் தெரியுமாறு செய்து, செந்நெறி பூணச் செய்தும் பயன்படாது போகையில், எதற்கும் கட்டுப்படாத கீழ்மக்களை அழித்துவிடுகின்றான் என்ற கருத்தையும் "இறந்து உக நூறி என்ற சொற்களால் பேசுகிறான். அடுத்துத் தக்கோர் துயர் துடைத்து என்று பேசுகிறான். பரம்பொருளின் அருளை மறக்கருணை என்றும் அறக்கருணை என்றும் பிரித்துக் கூறுவர். இறந்து உகநூறுதல், மறக்கருணையின் பாற்படும். தக்கோர் துயர் துடைத்தல், அறக்கருணையிற்பாற்படும். இவை