பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 243 அனைத்தையும் தானே முன்னின்று செய்வதற்காகவே அவன் இங்கு வந்து பிறந்துள்ளான் என்கிறான். "இத்துணை ஆற்றல் பொருந்திய பரம்பொருள் இச்சா சக்தியாலேயே இதனைச் செய்ய முடியாதா? ஏன் பிறப்பெடுத்து வர வேண்டும்" என்று வினவப்படலாம். அவன் ஆற்றலால் இவற்றைச் செய்ய முடியினும், மக்கள் இதனால் முழுப்பயனை அடைய வேண்டும் என்றால் மக்களுடன் நேரிடைத் தொடர்பு கொள்ள வேண்டும். "ஆறு நிரம்பத் தண்ணிர் இருப்பினும் நாம் நம் சக்தி அளவாகத்தானே அதனைப் பயன்படுத்த முடியும்?. இறைவனின் கருணை கடல்போல் இருப்பினும் நான் என் கொள்கலத்தின் அளவுதானே அதில் முகந்துகொண்டு வரமுடிகிறது (கீதாஞ்சலி-) என்று தாகூரும் கூறுகிறார். எனவே அவன் மானுடச் சட்டை தாங்கி வருவது உயிர்கள் மாட்டுக் கொண்ட கருணையினாலேயே ஆகும். அப்படிக் கருணையினால் வருகிறவன் ஏன் ஒரு சிலரைக் கொல்ல வேண்டும்? ஏன் ஒரு சிலரைக் காக்க வேண்டும்? தண்டிப்பதும், கொல்வதும் இறைவன் அவர்கள் மாட்டுக் கொண்ட மறக்கருணையினால்தான். மருத்துவர் பெரிய அறுவை மருத்துவம் செய்யும்பொழுது கொல்ல வேண்டும் என்று கருதியா மருத்துவம் செய்கிறார். ஆனால் அவர் அறுத்துத் தள்ளுவது இன்பம் தருகின்ற செயலா? இல்லையே? செயல் அளவில் பெருந் துன்பத்தைத் தந்தாலும் பின்னர் அது நற்ப்யன் விளைக்கும் என்ற கருத்தில்தானே அறுவை செய்கிறார். அதேபோலத்தான் இறைவன் கொடுக்கின்ற தண்டனையும், அந்த ஆன்மாவை முன்னேற்றவே யாகும். அது சரி, 'கொல்லவும் வேண்டுமா? என்ற வினா அடுத்து வரும். ஆத்மாக்கள் என்றும் அழிவதில்லை. எனவே இருப்பதும், இறப்பதும் உடலே தவிர ஆத்மா அன்று. இதுபற்றிக் கூறவந்த கீதாசார்யன், -