பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 245 இராமகாதையைக் கம்பன் எடுத்துக்கொண்ட நோக்கத்தையும் ஒரளவு இதன்மூலம் அறிய முடிகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக உயரிய வாழ்வு வாழ்ந்த இத்தமிழர், ஒப்பற்றது என்று போற்றியது கற்புநெறி. அவர்கள் வாழ்ந்து, அனுபவம் பெற்று, அறிவினால் ஆய்ந்து, உணர்வினால் உணர்ந்து, ஒப்பற்றது என்று கூறியது அறநெறி வாழ்க்கை; அத்தமிழர் கண்ட கடவுட் பொருள், என்ற இம்மூன்றும் இராமகாதையில் மிகச்சிறந்த இடத்தைப் பெற்றிருப்பதால், கம்பன் இக்கதையைத் தேர்வு செய்துகொண்டான். கதை வடநாட்டில் தோன்றி இருப்பினும் இத்தமிழர்கள் தம் உயிரினும் சிறந்தவை என்று கருதிய விழுப்பொருள்கள் (Values) இக்கதையில் இருப்பதை அறிந்த கம்பன், அதற்கு முழு வடிவு கொடுத்து, இத்தமிழர்களைத் தட்டி எழுப்பவே, இக்கதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். - இவற்றின் காரணமாக, இக்கதையை ஏற்றுக்கொண்டு அதனைக் கூறும் முறையில், இத்தமிழ் நாகரிகத்தின் இறங்கு முகத்திற்குக் காரணமாக இருந்த பரத்தமை, கள்ளுண்டல், காழ்ப்புணர்ச்சி, போரிடுதல் என்பவற்றை ஒதுக்கிவிட்டு, மேலே கூறப்பெற்ற அற வாழ்க்கை வாழ்ந்தால்தான் இத்தமிழச்சாதி நின்று நிலைபெற முடியும் என்பதையும், கவிச்சக்கரவர்த்தி கம்பன் நிறுவிவிட்டான். உலகிலுள்ள பிற சமயவாதிகள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய முறையில், கடவுள் தத்துவத்தையும் விளக்கிய பெருமை கம்பனுக்கே உண்டு. இந்த நுணுக்கத்தை அறிந்தவன் பாரதி ஒருவனே. எனவேதான் இத்தகைய நூல் படைக்கும் ஆற்றலுடைய ஒரு சமுதா யத்தை அமரத்துவம் வாய்ந்தது என்று கூறினான். இவற்றுடன், கம்பன் மானுட சாதியின் பெருமை யையும் நன்கு உணர்ந்திருந்தான். நாம ரூப மற்ற