பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 + கம்பன் - புதிய பார்வை பரம்பொருள் கூட வடிவெடுத்து வர விருபினால் மானுட வடிவைத்தான் மேற்கொள்கிறது என்று கருதினான். தேவர் இயக்கர், முனிவர், அரக்கர் முதலிய எத்தனையோ இனங்கள் இருப்பினும் மானுட இனத்தைத்தான் பரம்பொருளும் ஏற்கிறது என்பதைக் கூறவந்த கவிஞன், ஆறுகொள் சடிலத் தானும், அயனும் என்று இவர்கள் ஆதி வேறு உள குழுவை எல்லாம், மானுடம் வென்றது அம்மா! (நட்புக்கொள் படலம்-19) கங்கை தங்கிய சிவன், அயன் என்ற மும்மூர்த்திகள் குழு, தேவர்கள் குழு என்று, வேறு வேறாக உள்ள கூட்டத்தை எல்லாம் மானுடம் வென்றது.) என்று பேசுகிறான். தேவர்கள் முதலிய குழுவினர் புலனடக்கம் கடைப்பிடிப்பதில்லை என்று தமிழர்கள் நம்பினர் என்பதற்குக் குறள் ஒன்றே சான்றாகும். அற்பர்கள் (சுயவர்கள்) பற்றிக் கூறவந்த வள்ளுவப் பேராசான், "கயவர்கள் தேவர்களைப் போலவே உள்ளனர்; ஏன் என்றால் மனம் போனபடி, விரும்பினதை நல்லது கெட்டது ஆராயாமல், உடனே செய்துவிடுவார்கள்" என்ற கருத்தில். தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவன செய்து ஒழுக லான் - ... ' - - (திருக்குறள்-1073) என்கின்றான். புலனடக்கம் இன்மைக்கு உதாரணம் தேடி அதிக தூரஞ் செல்ல வேண்டிய தேவை இல்லை. தேவர்கள் அரசனாகிய இந்திரன், அகலிகைபால் கொண்ட தவறான