பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. கவிக்கு நாயகன் கிம்பநாடன் மக்கள் உலகிலும், விலங்கு உலகிலும் பறவை உலகிலும், பாத்திரங்கள் படைத்துள்ளான். இவை ஒவ்வொன்றையும் தனித்தனியே எடுத்துக் கொண்டாலும் ஒப்பற்று விளங்குகின்றன. இரண்டு பாடல்களில் வந்துபோகும் நீலமாலை என்ற பாத்திரத்திலிருந்து, நூல் முழுதும் ஊடுருவி நிற்கும் காப்பியத் தலைவன் வரை, ஒவ்வொன்றும் தன்னேரில்லாத சிறப்புடன் விளங்குமாறு படைத்துள்ளான். உடையவர்கள் - இல்லாதவர்கள் இராம காதையை அவன் எடுத்துக்கொண்ட நோக்கம் பற்றி முன்னர் ஆராயப்பெற்றது. இக்கதையை எடுத்துக் கொண்டு, மக்கட் சமுதாயத்திற்குப் பொதுவாகவும், தமிழகத்திற்குச் சிறப்பாகவும் சில அறவுரைகளைக் கூறவேண்டும் என்பதே அவன் தலையாய நோக்கம் என்பது கூறப்பெற்றதன்றோ. அவற்றுள்ளும் தலையாயது புலனடக்கம். அது மனித குலத்துக்கு இன்றியமையாது வேண்டப்படுவது என்பதை வலியுறுத்துவதாகும். அதனால்தான் காப்பியத் தொடக்கத்திலேயே ஐந்து பொறிகளாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி என்பவை நேர்வழியை விட்டு விலகாத மக்கள் நிரம்பிய கோசலம் என்று கூறினான். எனவே புலனடக்கம் பேசுவது அவனுடைய குறிக்கோள் என்பதை அறியமுடிகிறது. இராமன், இலக்குவன், பரதன், சத்ருக்னன், வசிட்டன் விசுவாமித்திரன், சனகன், அனுமன், வீடணன், குகன் என்ற பாத்திரப்படைப்புகளின் அடித்தளமே புலனடக்கந்