பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 249 தான். இவர்களின் எதிராகத் தசரதன், சுக்ரீவன், வாலி, கும்பகர்ணன், இந்திரசித்தன், இராவணன், என்பவர்கள் புலனடக்கம் இல்லாதவர்கள். - கிட்கிந்தையில் மூவர் மனிதப் படைப்பே அல்லாமல், விலங்கு உலகிலும் ஓர் ஒப்பற்ற படைப்பை ஆக்க விரும்புகிறான். காப்பிய நாயகனுக்குப் புலனடக்கம் முதலியவற்றில் இணையான ஒரு பாத்திரமாக அது அமைய வேண்டும். அவ்வாறு செய்தால் காப்பியத் தலைவனின் சிறப்பைக் குறைப்பதாக ஆகிவிடும். இந்த இக்கட்டிலிருந்து அற்புதமாகத் தன்னை விடுவித்துக் கொள்கிறான் கவிஞன். அவ்வாறு அவன் படைக்கும் பாத்திரம் காப்பியத் தலைவனுக்கு உதவு வதாகவும், அவனுடைய சிறப்பை அதிகப்படுத்துவ தாகவும் அமைத்துவிட்டால் இன்னும் சிறப்பல்லவா? இவை அனைத்தையும் மனத்துட்கொண்டே அனுமன் என்ற பாத்திரத்தைப் படைக்கிறான். கிட்கிந்தையில் முக்கியமாக மூன்று பாத்திரங்களைப் படைக்கிறான் என்றாலும், மூன்றும், மூன்று விதம்! புலனடக்கத்தில் ஈடு இணையற்ற அனுமன்; புலனடக்கம் என்றால் என்ன என்று தெரியாதவனும் உயிருக்குப் பெரிதும் அஞ்சுப வனும், ஓயாத சந்தேகம் கொள்பவனும், அவசரப்பட்டு முடிவு எடுப்பவனும் ஆகிய சுக்ரீவன், புலனடக்கத்தைக் கைக்கொண்டு, மாபெரும் தவம் இயற்றி எல்லை இல்லாத வரபலத்தைப் பெற்ற பிறகு, புலனடக்கத்தைக் காற்றில் பறக்கவிட்ட வாலி என மூவர் எதிர்படுகின்றனர். ஏன் வாலி? எத்துணை வரபலம் இருப்பினும், புலனடக்கம் இல்லாத பொழுது, ஒருவன் வரபலம் அழிவை நோக்கியே அவனை அழைத்துச் செல்கிறது என்பதை அறிவுறுத்தவே