பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 கம்பன் - புதிய பார்வை வாலி அமைக்கப்படுகிறான். ஆனால் இறக்கும் நேரத்தில் தன் பிழையை நினைந்து வருந்தினதால், வீடு பெறுகிறான். மார்ச்சால கக்ரீவன் சுக்ரீவன் புலனடக்கம் இல்லாதவனாக, வாழ்க்கையைத் தொடங்கி, இறுதியில் இராமனிடம் கொண்ட அளவிறந்த அன்பால் பயனடைகின்றான். இவன் இராமனிடம் அன்பு செலுத்தியதைவிட, இராமன் இவனிடம் காட்டிய கருணையே அதிகம். இவன் மேற்கொண்ட வழியை மார்ச்சால மார்க்கம்’ என்று கூறலாம். அதாவது பூனைக்குட்டியின் வழியாகும். பூனைக்குட்டி தாயைப் பற்றிக்கொண்டு செல்லும் சக்தி இல்லாதது. தாய்ப் பூனைதான், இதனைத் தன் வாயில் கவ்விக்கொண்டு, இங்கும் அங்கும் செல்லும், ஆபத்துக் காலத்தில்கூட இக்குட்டி தன்னைத்தான் காத்துக்கொள்ளும் சக்தி இல்லாதது. அப்பொழுதும் தாய்ப்பூனைதான் குட்டியைக் கவ்விப் பாதுகாப்பான இடத்தில் கொண்டு சென்று வைக்கும். அந்த முறையில், அப்பாவியான சுக்ரீவன் இராமனால் பாதுகாக்கப்படுகிறான். முதன்முறையாக இராமனைச் சந்தித்தபொழுது உன்னைச் சரணடைகின்றேன் என்று கூறிவிட்டான். எனவே, அவன் என்ன நிலையில் இருப்பினும் அவனைக் காக்கும் பொறுப்பு இராகவனுடையது ஆகிவிடு கிறது. - , , . . அடைமொழிக் களஞ்சியம் இனி மூன்றாவதாக உள்ளவன் அனுமன் என்பவன். இந்த ஒரு பாத்திரத்தைக் கம்பன் படைத்துள்ள முறை, உலக இலக்கியம் அனைத்தையும் தேடினாலும், இப்படி ஒரு படைப்பைப் பார்ப்பது கடினம் என்று கூறவேண்டிய தரத்தை எட்டிவிடுகிறது. இவனைப் பற்றி நூற்றுக்கணக்கான அடைமொழிகளை வழங்குகிறான் கவிஞன். இன்னுங்