பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 + கம்பன் - புதிய பார்வை உதவியுள்ளனர் என்றாலும், அவதார நோக்கம் நிறைவேற அனுமன் செய்த உதவிபோல யாரும் செய்யவில்லை என்றுதான் கூற வேண்யுள்ளது. கைகேயி வரங்கொள்ள வில்லை எனில், இராமன் தசரதனுக்குப் பிறகு சில ஆயிரம் ஆண்டுகள் அரசு வீற்றிருந்திருப்பான். எனவே அவள் உதவி மிகச் சிறந்தது. ஆகவேதான் கவிஞன், அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும் துரக்க நல் அறம் துறந்தனள் துமொழி மடமான் - (மந்தரை சூழ்ச்சிப் படலம் -8) என்று அவள் செயலுக்கு அமைதி கூறுகிறான். சூர்ப்பனகை போன்றோரும் அவதார நோக்கம் நிறைவேற உதவுகிறார்கள் எனில், அவர்கள் செயலால் இராமன் பெருந்துயரத்தை அடைய நேரிடுகிறது. அவதார நோக்கம் நிறைவேற அவர்கள் உதவினார்கள் என்றாலும், அவதார புருஷன் அந்த உதவிகளால் அவதியுற்றது உண்மை. இவர்கள் செயல்களால் இராமனுடைய புகழ் வளர்ந்தது என்பது உண்மைதான். பரம்பொருளாக இருக்கும் ஒருவன், நிர்க்குன, நிராமய, நிராலஞ்சனாய் நிற்கும் ஒருவன், உயிர்கள் மாட்டுக் கொண்டுள்ள பரம கருணை வெளிப்பட, அவனுடைய அவதாரம் உதவுகிறது. அதே அவதாரமே, மறக்கருணையால் இராவணனைக் கொன்று நல்லோர் துயர் துடைக்க உதவுகிறது. கோதண்டப் பெருமை ஆனால், தீயோர் இறந்து உக நூறவும், நல்லோரைக் காக்கவும் இராமன் முயலும்பொழுது, எதை வைத்துக் கொண்டு இவற்றைச் செய்தான். திருமாலுக்குரிய சங்கு சக்கரமோ, அன்றிச் சிவபிரானுக்குரிய மழுவோ கொண்டு இவற்றை இராமன் செய்யவில்லை. அவனுக்கு உதவியாக இருந்தது அவன் கையில் இருந்த கோதண்டம் என்ற வில்லே அன்றோ? தசரத இராமன், அயோத்தி இராமனாகி, வனத்து