பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 253 வாழ் இராமனாக மாறிய நிலையிலும், அவன் புகழ் ஓங்க வழி இல்லை. கோதண்ட இராமனாக ஆகும்பொழுதுதான் அவன் புகழ் ஓங்குகிறது; அவதார நோக்கம் நிறைவேறுகிறது. தியோர் அழிக்கப்படுகின்றனர்; நல்லோர் காக்கப்படுகின்றனர். எனவே, இராமனுடைய பல்வேறு கோலங்களில் எல்லாம் உயர்ந்தது கோதண்டராமனாக உள்ள நிலை. இந்தக் கோதண்டத்தின் பெருமை அளவிடற்பாலதோ? சிறை இருந்த செல்வி, அனுமனிடத்தில், 'அனும! இந்தத் துன்பம் இழைக்கின்ற இலங்கை மாக்களையும், ஏன்? எல்லையில்லாத உலகங்கள் அனைத்தையுங் கூட, என் ஒரு சொல்லினால் சுட்டுவிடுவேன். ஆனால் அவ்வாறு செய்துவிட்டால் துரயவனாகிய இராமபிரானின், வில்லின் ஆற்றற்கு மாசு உண்டாகும் என்ற கருத்தினால் அந்த எண்ணத்தை விட்டுவிட்டேன்’ என்ற கருத்தில், எல்லை நீத்த உலகங்கள் யாவையும் என் சொல்லினால் சுடுவேன்; அது தூயவன் வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன். - சூடாமணிப் படலம் -8) என்று கூறுகிறாள். எனவே இராமனுடைய கோதண்டத்துக்கு எவ்வித மான மாசும் வாராமல் காப்பது தலைவியின் கடமை ஆகிவிடுகிறது. சாதாரணமாக ஒரு மனிதனுக்கு மாசு ஏற்படக்கூடாது என்றுதான் உலகவர் கூறுவர். இங்கே பிராட்டி தலைவனின் வில்லுக்கு மாசு வரக்கூடாது என்று பேசுகிறாள். ஏன் இவ்வாறு கூறுகிறாள் தன் தலைவனாகிய இராகவன் எக்காரணத்தாலும், எந்த இடத்திலும், எந்தச் சூழ்நிலையிலும், யாராலும் மாசுபட முடியாதவன். செம்பில் களிம்பு ஏறுமே தவிரப் பொன்னில் களிம்பு ஏறுவதில்லை. எனவேதான் வில்லைப் பற்றி மட்டும் பிராட்டி பேசுகிறாள்.