பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 + கம்பன் - புதிய பார்வை அனுமனுக்கு மட்டும் உரியது துரயவனாகிய இராமனின் வில்லுக்கு மாசு வாராமல் காப்பது ஒன்று. அதனைப் பிராட்டி செய்கிறாள். ஆனால் மாசு வராமல் காப்பது மட்டும் போதாதே! தசரதராமன் கோதண்டராமனாக ஆகவேண்டுமாயின், அந்தக் கோதண்டம் பணி புரிய வேண்டும். அது எப்பொழுது பணிபுரிய முடியும்? அதற்குரிய இலக்கைக் காட்டினால் தான் அது பணிபுரிய முடியும். அதன் இலக்கு யார் என்பதையும், அவன் எங்கே உள்ளான் என்பதையும், எப்படி அது பணிபுரிய வேண்டும் என்பதையும் கண்டு கூறினவன் அனுமன். கோதண்டம் பணிபுரிந்தமையின் இராமன் புகழ் பெற்றான்; அந்தக் கோதண்டம் பணிபுரிய அனுமன் மட்டுமே பேருதவி புரிந்தான். எனவே இராமன் புகழ் பரவவும், அனைவரும் அதில் பங்கு கொள்ளவும் உதவியவன் அனுமன் என்ற ஒரே பாத்திரம் ஆவான். எனவேதான், வேறு யாருக்கும் தராத ஒரு பெருமையைக் கவிஞன் அனுமனுக்கு மட்டும் தருகிறான். - செவிக்குத் தேன் என இராகவன் புகழினைத் திருத்தும் கவிக்கு நாயகன்................ - (ஊர்தேடு படலம்-132) இராகவன் புகழ் கேட்போர் செவியில் தேன் வந்து பாய்வது போலச் செய்யும் பணியில் அவன் புகழினைச் சமைத்து உதவும் குரங்குத் தலைவன்.) - என்றும் கவிஞன் அனுமனைப் பற்றிப் பேசுகிறான். திருத்தும் கவிக்கு நாயகன் - திருத்தும் என்ற சொல் சிந்திக்கத் தகுந்த ஒன்று. இன்றுங்கூடச் சில இனத்தவர்கள் வீடுகளில் 'காய்கறி களைத் திருத்தியாயிற்றா ? என்று கேட்கும் பழக்கம் இருந்து வருகிறது. காய்களைத் திருத்துதல் என்றால்