பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 255 என்ன? வாழைக்காய், பூசுணைக்காய் போன்றவைகள் முழுசாக இருந்தால் அவற்றை நாம் அனுபவிக்க இயலாது. அவற்றை நாம் அனுபவிக்க வேண்டுமாயின், அவற்றை நறுக்கித் துண்டம் செய்து பக்குவப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவற்றை நாம் அனுபவிக்க முடியும். அதேபோல, இராமன் புகழ் நம் சிந்தனைக்கு எட்டாததாய் இருந்தது. அனைத்தும் பரம்பொருள்தான் என்பதை நம் போன்றவர்கள் அறியவோ உணரவோ முடியாது. எனவே, அப்புகழை நாம் அறிந்து அனுபவிக்க முடியாது. அனுமன்தான் இராமனுடைய அவதார நோக்கம் நிறைவேறவும், அவன் கையிலுள்ள வில் புகழ் பெறவும், நேரிடையாக உதவினான். எனவே, இராமன் புகழினைப் பக்குவப்படுத்தி, நம்போலியரும் அனுபவிக்குமாறு செய்தவன் அனுமனே என்று கூறுகிறான் கவிஞன் கம்பனுடைய அனுமன் - வான்மீகத்திலும், அனுமன் மிகப் பெரிய கல்விமான் என்றும், அனைத்து வேதங்களையும் கற்றவன் என்றும் கூறப்பெற்றுள்ளது என்றாலும், கம்பநாடன் படைத்த அனுமன் வான்மீகியின் அனுமனிலும், முற்றும் வேறானவன். அனுமனிடம் கம்பநாடனுக்கு இத்துணை ஈடுபாடு வரக் காரணம் யாது? அவனும் ஏனைய பாத்திரங்கள் போலக் கம்பனுடைய படைப்புத்தான் என்றாலும், அனுமனுக்குத் தனி இடம் ஒன்றைக் கம்பன் தருவதை யாரும் மறுப்பதற்கில்லை. கம்பன் அனும னிடத்தில் இத்தகைய தனியான ஈடுபாடு கொள்ளக் காரணம் என்ன என்பதை அறிய வேண்டுமாயின், அவன் நூலுள் நுழைந்துதான் காணமுடியும். - நூற்றுக்கணக்கான அடைமொழிகளை அனுமனுக்கு வழங்குகிறான் கவிஞன் என்று கூறப்பெற்றதல்லவா? அவை அனைத்தையும் காண்டல் இக் கட்டுரையின்