பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 - கம்பன் - புதிய பார்வை நோக்கத்திற்கு அப்பால் மிகுந்துவிடும். ஆதலின் ஒரு சிலவற்றை மட்டும் காண்டல் பயன் உடையதாகும். மெய்ம்மையின் வேசு போல்வான் (3775) தருமத்தின் தனிமை தீர்ப்பான் (3781) பொய் இல்லாதவன் - (3853) பொய்இல் மாருதி (3879) பொய்த்தல இல உள்ளத்து அன்பு பொழிகின்ற புணர்ச்சியான் (4142) கோது இல் சிந்தை அனுமன் (4294) அறிவாளன் (4731) மாண்டு அற உலர்ந்தது மாருதிப் பெயர் ஆண்தகை மாளிவந்து அளிக்க ஆயிடை ஈண்டு அறம் முளைத்தென முளைத்தது இந்துவே (4886) நூற்பெருங்கடல் நுணங்கிய கேள்வியின் (5040) அறிவன் (5286) அலவன் . (5458) ஐம்புலம் வென்றவன் (5695) அறத்துக்கு ஆங்கு ஒரு தனித்துணை (5803) மடத்தோகையர் வலி வென்றவன் (7895) பொய்யொடும் பகைத்துத்து நின்ற குணத்தன் (857) தருமம் என்று அறிஞர் சொல்லும் தனிப் பொருள் (9574) தொல் அறச் சான்று என நின்றவன் (10267) (இவ்விடை தரப்பெற்றுள்ள தொடர் எண்கள் சென்னைக் கம்பன் பதிப்புப்படி அமைந்தன) ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாவதுபோல, நூற்றுக்கணக்கான அடைமொழிகளுள், சிறப்புடையனவும் பன்முறை ஆளப்படுவனவுமான சில அடைமொழிகள் இங்கே காட்டப்பெற்றுள்ளன. கவிஞன் அனுமனை என்ன வடிவோடு, என்ன பண்புகளோடு படைக்கின்றான் என்பதை அறிய இவை உதவும்.