பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 அ. ச. ஞானசம்பந்தன் 257 பொய் இல் மாருதி முதலாவது பொய் இல்லாதவன் பொய் இல் மாருதி 'பொய்யொடும் பகைத்து நின்ற குணத்தினான் என்ற தொடக்கத்தவை, அனுமன் எந்த நிலையை அடைந்தவன் என்பதைக் காட்ட வந்தன. பொய்யர் நெஞ்சில் புகான் ஈசன் என்பது முதுமொழி. பொய்யைத் தவிர்த்தவனே, இறைவனை அணுக முடியும் என்பது இந்நாட்டவர் கண்ட முடிவான கருத்தாகும். முனிவர் தேவர் முதலிய குழுக்களைத் தவிர இராமன் யார் என்பதை அறிந்தவர்கள் அவன் தம்பியர் மூவர். அவர்களை அல்லாமல் பார்த்த மாத்திரத்தில் அவனை இனங்கண்டு கொண்டவன் அனுமன் என்பதைக் கம்பன் அறிவிக்கின்றான். அயோத்தி யில் உள்ளவர்களும், இலங்கையில் உள்ளவர்களும், இராமனோடு பழகினவர்களும் அறிந்துகொள்ள முடியாத மறை பொருளை அனுமன் ஒருவன்தான் முதன்முதலில் கண்டு கொண்டவன். இவ்வாறு பரம்பொருளை அறியக் கூடியவனுக்குக் கூறப்பட்ட இலக்கணங்கள் அனைத்தை யும் வரிசைப்படுத்திக் கவிஞன் அனுமனுக்கு ஏற்றிவிடுகிறான். - சத்திய தரிசனம் செய்யும் தகுதி பெற்றவன் பொய் நடமாடாத உள்ளமுடையவனாக இருத்தல் வேண்டும் என்பதை, மணிவாசகர் போன்ற சத்திய தரிசனம் செய்தவர் பலர் பல படியாகக் கூறிச் சென்றுள்ளனர். பொய் எலாம் விடத் திருவருள் தந்து தன் இணையடி காட்டி - (அற்புதப் பத்து-I) என்பது திருவாசகம். அவன் திருவடி தரிசனம் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு இன்றியமையாது வேண்டப்படுவது பொய்யை அறவே ஒழித்தலாகும். அனுமன் இராமனை முதன்முதல் பார்த்தபோதே, அவன் யார் என்பதை அறிந்து விட்டான் என்றால், உறுதியாக