பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 கம்பன் - புதிய பார்வை அவன் பொய் கடிந்தவனாகத் தான் இருத்தல் வேண்டும் என்பது கம்பன் துணிவு. எனவேதான், பன்முறை அவன் 'பொய்யில் மாருதி என்று கூறுகிறான். பொய் கடிதல் என்பது எதிர்மறை முகமான பண்பாகும். பொய் கடித லுடன் மெய்க்குத் (சத்தியத்திற்குத் துணையாகவும் இருத்தல் வேண்டும். அதனைத்தான் மெய்ம்மையின் வேலி போல்வான்' என்று, கவிஞன் சுட்டிக்காட்டுகிறான். இந்த நிலையில் அனுமன் இராமனைச் சந்தித்த நிகழ்ச்சியைக் கம்பன் கண்ட முறையில் காண்பது பயனுடையதாகும். இரலையின் குன்றத்தை அடுத்து, இராம இலக்குவர்கள் வருவதைக் கண்ட சுக்ரீவன், இவர்கள் வாலியால் அனுப்பப்பட்டவர்கள் போலும் என்று மலை முழைஞ்சில் ஒடி ஒளிந்து கொள்கிறான். கற்றறிவுடைய மாருதி மட்டும் தான் சென்று அவர்கள் யார் என்று கண்டுவருவதாகக் கூறிவிட்டு, பிரம்மச்சாரி வடிவு கொண்டு தூரத்தே நின்று, இராம இலக்குவர்கைளக் கூர்ந்து நோக்குகிறான். அனுமனின் கூரிய பார்வை தூரத்தே நின்று நோக்கும் அனுமன் மனத்துள் ஒடும் எண்ண ஓட்டங்களைக் கூறுமுகமாகவே கவிஞன் அனுமன் யார் என்பதை நாம் அறியுமாறு செய்கிறான். வெஞ்சமத் தொழிலர், தவ மெய்யர், கைச் சிலையர். இது அவன் கண்ட காட்சி, போரில் ஈடுபடுபவர்கள்; ஆனால் தவதேடம் பூண்டுள்ளனர்; அதே நேரத்தில் அவ் வேடத்துக்கு ஒவ்வாத வில்லைத் தாங்கி உள்ளனர் என்றால், இவர்களிடம் ஏதோ ஒரு புதுமை இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். மும்மூர்த்திகள் என்று நினைக்கலாம் எனில் இவர்கள் இருவராக உளர், இவர்கட்கு இணை என்று யாரையும் கூறுமாறு இல்லை. (அனுமப்படலம்-5) ஆழமான துயரத்தில் நொந்தவர்கள்