பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 259 போலத் தெரிகின்றது. ஆனால் நோவைத் தாங்கிக்கொள்ள முடியாத சிறுமை உடையவர்கள் அல்லர். ஏதோ ஒன்றை இழந்து தேடிக் கொண்டு வருகின்றனர். (6) தருமம், தகவுடைமை என்பது இவர்களிடமே உள, சிறந்த ஒன்றை இடையில் இழந்தவர். இப்பொழுது அதனை இங்கும் அங்கும் தேடி வருகின்றனர். (7) கோபம் என்பதைத் துறந்தவர்கள், கருணைக் கடலாக உள்ளவர்கள். (8) கொடிய வேங்கை முதலிய விலங்குகள் தம் கன்றைக் கண்டது போல, இவர்களைப் பார்த்துக் களிக்கின்றன. கனலைக் கக்கும் பரல்கற்கள் இவர்கள் பாதம் பட்டவுடன் மலர் களைப் போலக் குலைகின்றன. செல்லும் திசைதோறும் மரமும் புல்லும், இவர்கட்கு வணக்கம் செய்வதுபோலச் சாய்கின்றன. எனவே அறம் என்ற ஒன்றே மானுட வடிவு தாங்கி இங்கு வந்துள்ளது (12). இவை அனைத்தும் கற்றறிவும்,நுண்மாண் நுழை புலமும், ஆழ்ந்த ஆராய்ச்சியும், உடைய அனுமனின் நுணுக்கமான பார்வையில் கிடைத்தவை. இந்தச் செயல்களைக் கொண்டு ஒரு முடிவுக்கு வருகிறான் அஞ்சனைச் சிறுவன். துன்பினைத் துடைத்து மாயத் தொல்வினை தன்னை நீக்கி, தென்புலத்து அன்றி, மீரா நெறிஉய்க்கும் தேவரோ தாம் என்பு எனக்கு உருகு கின்றது; இவர் கின்றது அளவில் காதல்; அன்பினுக்கு அவதி இல்லை; அடைவுஎன்கொல் அறிதல் தேற்றேன்? . (அனுமப் படலம்-13) |தம்மை வந்து அடைந்தவர்கள் துன்பத்தை முற்றிலும் போக்கி, இரு வினைகளிலிருந்தும் அவர்களை மீட்டு, வீணாகச் செத்து மடியாமல் வீட்டுலகுக்கு அனுப்பும் பரம்பொருளோ இவர்கள்? கண்பு மாத்திரத்தில் எனக்கு