பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 + கம்பன் - புதிய பார்வை எலும்புகள் உருகுகின்றன. அளவில்லாத பக்தி ஏற்படுகிறது; இவர்கள் மாட்டு அன்பு வளர்கிறது. காரணம் என்ன வென்றே தெரியவில்லையே!) என்ற முடிவுக்கு வருகிறான். இந்த முடிவுக்கு வர அவனுக்கு உதவி புரிந்தவை யாவை : துரத்திலிருந்து பார்த்த மாத்திரத்தில் தன் கூர்மையான கண்களின் துணை கொண்டு பார்த்தவற்றை மட்டும் வைத்துக் கொண்டு இந்த முடிவுக்கு வந்தான் எனில், அவனுடைய அறிவும், ஆற்றலும், கல்வியும், எல்லையற்றவை என்பதைக் கவிஞன் விளங்க வைக்கின்றான். ஒருவனுடைய கல்வி, கேள்வி, அறிவால் மட்டும் இத்துணை அளவு ஆற்றல் வந்துவிடும் என்று நினைப்பது, அத்துணைப் பொருத்த மாகாது. எனவே, கவிஞன் அவனுடைய புலனடக்கத்தைப் பற்றிக் கூறுகிறான். புலனடக்கமே காரணம் 'ஐம்புலம் வென்றான், மடத்தோகையர் வலிவென் றவன், வெல்லப்பட்டார் அஞ்சு எனும் புலன்கள் ஒத்தார்; அவனும் (மாருதி நல் அறிவை ஒத்தான் என்பவை போன்ற அடைமொழிகளைத் தருவதன் மூலம் அனுமனை நன்கு அறிய வழிவகுக்கின்றான். இத்துணை அளவு புலடனக்கஞ் செய்தவன், கல்வி கேள்விகளில் சிறந்து நிற்றலும், கண்களால் பார்த்தவற்றை மட்டும் வைத்துக் கொண்டு வருகின்றவர்கள் யார் என்ற முடிவுக்கு வருவதும் வியப்பன்று! வான்மீகியில் வரும் அனுமன் கற்றறிவுடைய னாகக் காட்சியளிக்கிறான். ஆனால் வருகிறவர்களைத் துரத்தே நின்று. பார்த்து எடை போடுகின்ற காட்சி இல்லை. . இனி, காப்பியத்தைக் கற்கின்ற நாம், நடைபெற்ற தையும், அவன் மனத்திரையில் ஒடிய எண்ணங்களையும், அவன் கண்ட முடிவுகளையும் பார்த்து, அனுமன் எத்தகையவன் என்ற ஒரு முடிவுக்கு வருமாறு வாய்ப்